ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016
ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா?

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
பெற்றோர்கள் அனைவரு க்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.
அதற்காக ஊட்டச் சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளு க்குச் செய்கிறார்கள் பலர்.

குழந்தைகளின் உயரம் குறித்த மருத்துவ விளக்கங் களையும் ஆலோசனை களையும் தருகிறார்,

குழந்தைகள் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் சரவணகுமார்.

வளர்ச்சியைத் தீர்மானிப்பது ஹார்மோன்!


ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது ஆரம்பிப்பது.

பொதுவாகக் கருவில் வளரும் குழந்தை 17 – 20 இன்ச் வரை வளரலாம்.

மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியி லிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone).

இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்குப் பின்புறமாக இருக்கும். நிலக்கடலை அளவிலி ருக்கும் இது,

மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல் பாட்டை இது கட்டுப் படுத்துகிறது.

இது சுரக்கும் ஹார்மோன் தான் ஒருவரை வளரச் செய்கிறது;

உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்பு களின் வளர்ச்சி க்குக் காரணமாக இருக்கிறது.

இந்த வளர்ச்சி ஹார்மோனின் சுரப்பு குறைவத ற்கும் கூடுவத ற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள்,

கிருமித் தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவை காரணங் களாகலாம்.

வளர்ச்சி நிலைகள் இரண்டு!

* முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததி லிருந்து 12 வயது வரை நிகழும்.

இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும்.

* இரண்டாம் கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணு க்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயது வரை இருக்கும்

(சிலருக்கு அதிக பட்சமாக 23 வயது வரை வளர்ச்சி இருக்கலாம்). இந்தக் கால கட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும்.


இந்த இளம் வயதில் தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

இந்தக் கால கட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிக முள்ள முட்டை,

சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்க லாம்.

ஊட்டச்சத்து பானங்கள் உயரத்தை அதிகரிக்குமா?

ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணய த்தில் எந்தத் தாக்க த்தையும் ஏற்படுத்தாது.

உயரத்தை இது போன்ற புறக்காரணி களால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக் கூடிய புரதம் அதிகம் உள்ள

உணவு களுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும்.

வளர்ச்சி ஹார்மோன் களில் எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமை யடையும்.

ட்வார்ஃபிசம்… குணப்படுத்த முடியாது!

சில குழந்தை களுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்னை யால் ட்வார்ஃபிசம் (Dwarfism) ஏற்பட வாய்ப்பிருக் கிறது.

ட்வார்ஃபிசம் என்பது குள்ளமாக இருப்பது. மூன்று அடிக்கு மேல் அந்தக் குழந்தை யால் வளர முடியாது;


அதை குணப் படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்ஃபிசத் தால் பாதிக்கப் பட்டவர்களை

மாற்றுத் திறனாளிக ளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக் கொண்டிருப் பது குறிப்பிடத் தக்கது.
குரோத் ஹார்மோன் சிகிச்சை!
இன்னொரு பக்கம், வளர்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது வெகு அரிதாக நடக்கும்.

அவர்கள் 7-8 அடி வளர்ந்து அதீத உயரத்துடன் இருப்பார்கள்.

உலகின் மிக உயரமான மனிதன் ராபர்ட் வாட்ளோ (Robert Wadlow). இவருடைய உயரம் 8.11 அடி.


* உயரம் குறைந்த குழந்தை களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.
அவர்களுக்குப் பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தை களும் அவசியம்.

தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.

* பெற்றோர்கள், குழந்தை களிடம் உயரத்தால் சமூக வாழ்க்கை யில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

உயரம் குறித்து கவலைப் படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர் களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம்.


* குழந்தை களிடம், அவர்கள் தங்களைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதைத் தவிர்க்கச் சொல்லி

தம்மைத் தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா? ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா? Reviewed by Fakrudeen Ali Ahamed on 12/13/2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚