முதல்வர் கவர்னர் அமைச்சர்கள் வீடுகளில் வீணாகும் நீர் !

தமிழக விவசாயத்திற்கு நீர் தேவை என கேட்கும் போது, கர்நாடகா முதல்வர் சித்தராமையா முதல் அனைத்து கட்சி தலைவர்களும் எங்களுக்கு குடிநீருக்கே பஞ்சம் என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
முதல்வர் கவர்னர் அமைச்சர்கள் வீடுகளில் வீணாகும் நீர் !
ஆனால் உண்மை நிலைவேறு, கர்நாடகா கவர்னர் மாளிகை யில் பூங்கா பராம ரிப்பது முதல் அனைத்து பயன் பாட்டிற்கும், ஒரு மாதத்திற்கு 62.42 லட்சம் லிட்டர் காவிரி நீர் பயன்படுத்த படுகிறது. 

இந்த நீர் 52 ஆயிரம் குடும்ப ங்கள் குடிநீராக பயன் படுத்தலாம். இது குறித்து, பெங்களூரு நகர குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள விபரம்:

கவர்னர் மாளிகை யில், 92 ஏக்கர் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. இந்த பூங்காக்களு க்கு நீர் பாய்ச்ச, காவிரி நீர் தான் பயன் படுத்தப் படுகிறது.

மாநில தகவல் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல். இவரது பங்களா வில், மாதந்தோறும், 8.95 லட்சம் லிட்டர் காவிரி நீர் பயன் படுத்தப் படுகிறது. இதற்கு இவர் கட்டும் கட்டணம், 5.70 லட்சம் ரூபாய்.

முதல்வர் சித்தராமை யா பெயரில், நான்கு குடிநீர் இணைப் புகள் உள்ளன. இவர் வீட்டில் மாதந் தோறும், 5.10 லட்சம் லிட்டர் குடிநீர் பயன் படுத்தப் படுகிறது.
காவிரியில் இருந்து பெங்களூரு க்கு, நாள் தோறும், 142.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. நாள்தோறும், 140 கோடி லிட்டர் தண்ணீரை, பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம், பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.

பெங்களூரு விலுள்ள அமைச்சர்கள் வீடுகளில் மட்டும் 1.06 கோடி லிட்டர் தண்ணீர் செலவிட படுகிறது.

அமைச்சர்கள் வீடுகளில் வாகனங்கள் கழுவவும், பூங்கா பராமரிக்க செடிகளுக்கு நீர் பாச்சவும் பயன்படுத்த படுகிறது என்ற உண்மை வெளிச்சத் திற்கு வந்துள்ளது.
Tags: