அட்டெண்டர் கூடவே இருக்க வேண்டும்.. இது அவசியமா?

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷன் ஒன்றில் தனியாக வசித்து வரும் நண்பர் அவர். திடீரென்று அவரது உடல்நிலை மோசமாகி கடும் காய்ச்சலுக்கு ஆளாகியி ருக்கிறார். 
அட்டெண்டர் கூடவே இருக்க வேண்டும்.. இது அவசியமா?
பக்கத்து அறைக்காரர் மனிதாபி மானத்தோடு அவரை அருகில் இருந்த அரசு மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்று, சேர்க்கைப் படிவத்தை நிரப்பி கையெழுத்திட்டு சேர்த்தி ருக்கிறார்.

அப்போது பணியிலிருந்த செவிலியர் சிகிச்சை முடியும் வரைக்கும் அட்டெண்டரும் கூடவே இருக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தி ருக்கின்றனர். தனக்காக ஒருவர் இவ்வளவு தூரம் வந்ததே பெரிது எனும்போது,

எப்படி அவரை கூடவே இருக்கச் சொல்ல முடியும் என்று நண்பர் கேட்டிருக்கிறார். இருந்தே ஆக வேண்டும் என்று அவரைக் கட்டாயப் படுத்தியிருக்கி ன்றனர். இது போன்ற அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

அட்டெண்டரும் நோயாளியுடனே இருக்க வேண்டும் என்று எந்த விதி முறையும் இல்லை. அப்படி இருந்தும், ‘அட்டெண்டர் இருந்தால் தான் சேர்த்துக் கொள்வோம்’ என்கிற போக்கு பொதுவாக அரசு மருத்துவ மனைகளில் இருக்கிறது. 
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !
அட்டெண்டர் இருந்தால் தான் நோயாளியை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள முடியும் என்றால், யாருமற்று தனியாக வாழ்ந்து வருபவ ர்களின் நிலை என்னவாகும்? 

மருத்துவ மனைகளின் இந்த தவறான போக்கை எதிர்த்து என்ன செய்ய வேண்டும்? மருத்துவ செயற்பாட்டாளர் சண்முக வேலாயுதம் இது பற்றிக் கூறும் போது...

கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால், பிரசவத்தின் போதும், முக்கியமான அறுவை சிகிச்சைகளின் போதும் அட்டெண்டர் இருக்க வேண்டும். 

மற்ற உடல் நலக்கோளாறு களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு அட்டெண்டர் இருக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. 

பொதுவாக அரசு மருத்துவ மனைகளில் எந்த சிகிச்சைக்காகச் சென்றாலும், அட்டெண்டர் இருந்தால் தான் அனுமதிப்போம் என்கின்றனர். ஐசியுவுக்குள் மட்டும்தான் அட்டெண்டரை அனுமதிப்பதில்லை. 

அப்படியிருந்தும் வெளியில் காத்திருக்க வேண்டும் என்கின்றனர். முதலில் அப்படி நிர்ப்பந் திப்பதே தவறான செயல். 

அடுத்ததாக நோயாளிக ளுக்கான அடிப்படை வசதிகளே நிறைவேற்றப் படாமல் இருக்கும் போது அட்டெண்டர் தங்குவதற் கான வசதிகள் இருக்கவே இருக்காது. 

நோயாளியைச் சோதித்து அவரது நோயினைக் கண்டறிந்து அதற்கான மருந்துகளை பரிந்துரைப்பது மருத்துவரின் பணி. 

அந்நோயாளி குணமடையும் வரையிலும் அவரை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு செவிலியருக்கு இருக்கிறது.

நோயாளி களுக்கு உணவு, மருந்து கொடுப்பது தொடங்கி உடை மாற்றி விடுவது வரையிலும் செவிலியரின் பணிதான். 

சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு செவிலியர் ஊட்டி விட வேண்டும். ஒரு தாய் தனது குழந்தையை பராமரிப்பதைப் போல் செவிலியர் நோயாளிகள் மீது அக்கறை செலுத்த வேண்டும். 
அட்டெண்டர் கூடவே இருக்க வேண்டும்.. இது அவசியமா?
சாப்பாடு மற்றும் மருந்தை நோயாளி களுக்கு கொடுக்க வேண்டும். இங்கோ, அவர்கள் அறிவித்த பிறகு அட்டெண்டர் தான் சென்று வாங்கி வந்து தர வேண்டும் என்கிற நிலை இருக்கிறது.

அட்டெண்டர் இல்லாமல் சேர்கிறவர்கள் கவனிப்பாரி ன்றித்தான் இருக்கி ன்றனர். அருகிலிருப் பவர்கள் மனிதாபி மானத்தோடு சில உதவிகள் புரிகின்றனர். மற்றபடி பெரிய கவனிப்பு எதுவும் இருப்ப தில்லை. 

செவிலியர் செய்ய வேண்டிய பணியை அட்டெண்டர் மூலம் செய்து கொள்ள நினைக்கி றார்கள் என்பதுதான் உண்மை. இதற்கு செவிலியர்கள் மீது மட்டுமே நாம் குற்றம் சுமத்த முடியாது.

ஏனெனில் அரசு மருத்துவ மனைகளில் போதிய செவிலியர் பணி இடங்கள் நிரப்பப் படாமல் இருக்கின்றது. இதனால் அதிக பணிச் சுமைக்கு அவர்கள் ஆளாகி ன்றனர். 

எனவே, நோயாளியுடன் அட்டெண்டர் இருக்க வேண்டும் என நிர்ப்பந்தி க்கிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் லஞ்சம் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. 

பிரசவம் என்றால் அதற்கென லஞ்சத் தொகையையே நிர்ணயித்து வைத்திரு க்கின்றனர். செவிலியர் மட்டுமல்ல... வார்டுபாய், கூட்டிப் பெருக்குகிறவர் வரை எல்லோ ருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தாக இருக்கிறது.

தனியார் மருத்துவ மனைகளில் இது போன்ற பிரச்னைகள் இருப்ப தில்லை. ஏனென்றால், அதன் நிர்வாக அமைப்பு அப்படிப் பட்டது. 

தனியாரால் ஒழுங் கமைக்கப் பட்டிருக்கும் நிர்வாகக் கட்டமைப்பை ஏன் அரசால் ஒழுங்குப் படுத்த முடியாது? பொதுவாகவே இங்கு நோயாளிகள் மத்தியில் அவர்களு க்கான சட்டங்கள்

மற்றும் உரிமைகள் குறித்தான விழிப் புணர்வு குறைவாகவே இருக்கிறது. மருத்துவ மனை நிர்வாகமும் அவர்களுக் கான உரிமைகளை வெளிப் படையாக அறிவிப்பதில்லை.

ஆக, நோயாளிகள் மத்தியில் முதலில் இந்த விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெயரளவில் இல்லாமல் செயல் படக்கூடிய நோயாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம் ஒவ்வொரு மருத்துவ மனைகளிலும் நடத்தப்பட வேண்டும். 

அப்படியான விழிப்புணர்வு ஏற்படும் நிலையில் அட்டெண்டர் இருந்தால் தான் சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொல்வது, 

லஞ்சம் கேட்பது ஆகியவற்றுக்கு எதிராக நோயாளிகளே குரல் கொடு ப்பார்கள். அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கென ஒரு ஹெல்ப் லைன் கூட வைக்கலாம்’’ என்கிறார் சண்முக வேலாயுதம்.

இதற்கென என்ன நடவடிக்கை எடுத்திருக் கிறீர்கள்? இது பற்றி நோயாளிகள் யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? குடும்ப நலவாழ்வுத் துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணனிடம் கேட்டோம்...
நோயாளியை சேர்க்க வேண்டு மென்றால் அவசியம் அட்டெண்டர் இருக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. இதை அனைத்து மருத்துவமனைகளுக்கு சர்க்குலர் அனுப்பியும், கூட்டங்களிலும் தெரிவித்து வருகிறோம். 

செவிலியர் தான் முழுப் பொறுப்பேற்று அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நர்ஸிங் கேர் இல்லாத நேரங்களில் தன்னார் வத்துடன் முன் வரும் தன்னார் வலர்களைக் கொண்டு நோயாளிகளை கண் காணிக்கி றோம்.

நோயாளிகளிடம் பாரபட்சமின்றி நட்பு பாராட்ட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். முக்கியமான மருத்துவ மனைகளில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வந்து செல்கின்றனர். 

மருத்துவர்கள் தொடங்கி ஊழியர்கள் வரை எல்லோரும் நோயாளிகளை சிறந்த முறையில் தான் அணுகுகின்றனர்.
அட்டெண்டர் கூடவே இருக்க வேண்டும்.. இது அவசியமா?
அப்படி இருந்தும் ஓரிரு நிகழ்வுகள் இது போல நடை பெறுகிறது. அட்டெண்டர் இருந்தால் தான் அனுமதிப்போம் என்று செவிலியர்கள் தெரிவித்தால் அம்மருத்துவ மனையின் தலைவர் அல்லது கண்காணிப்பாளரிடம் தெரியப் படுத்த வேண்டும். 
உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !
அவர்கள் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்கிறார் ராதா கிருஷ்ணன். நமது உரிமைகளை அறிந்து கொள்வோம்... அதை நிலை நாட்டுவோம்... - நன்றி குங்குமம் டாக்டர் - கி.ச.திலீபன்.
Tags: