சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ரயில் !

சூரிய சக்தி மூலம் ரயிலின் மின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள திட்ட மிட்டுள்ளது 
சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ரயில் !
இந்திய ரயில்வே. ரயில் நிலைய மேற் கூரைகள், கட்டிடங்கள் மற்றும் ரயிலின் மேற் பகுதியில் சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1000 மெகவாட் மின் உற்பத்தி செய்ய திட்ட மிட்டுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக ஹரியாணா மாநிலம் ரிவாரிக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் சீத்த பூருக்கும் இடையிலான பயணிகள் ரயிலின் மேற் கூரையில் சோலார் தகடுகளை அமைத்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

இதன் மூலம் தினசரி 17 கிலோவாட் மின் உற்பத்தி செய்யப் படுகிறது. இதை கொண்டு ரயில் பெட்டியின் மின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதை அமைக்க ரூ. 3.90 லட்சம் செலவாகி யுள்ளது. 
சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ரயில் !
இதன் மூலம் மின்சாரத்துக் கான செலவுகளில் ஆண்டுக்கு ரூ. 1.24 லட்சம் சேமிக்க முடியும் என்று கூறியுள்ளது வடக்கு ரயில்வே நிர்வாகம். இதை மேலும் சில ரயில்களில் சோதிக்க பணிகள் நடந்து வருகிறது. 

ரயில் பெட்டிகளிலேயே சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் மின்சாரம் கிடைக்காத 

நாட்டின் உள்ளடங்கிய பகுதிகளுக்கும் ரயில் சேவை கிடைக்கச் செய்ய முடியும். மேலும் ரயிலின் டீசல் பயன்பாடும் கணிசமாகக் குறையும். 
Tags: