ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
ஒட்டகம் (camel) என்றவுடன் பாலை வனமும் (desert) சேர்த்துத் தான் அனை வருக்கும் நினைவு வரும். அந்த ஒட்டக த்தைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறீர்கள்.


பாலைவனத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழும் இந்த மிருகங் களிடம் இருக்கும் விசேடதிறன் என்றால்,

உணவு நீர் இன்றி நீண்ட காலத்திற்கு இவைகளால் வாழ முடிகின்றது.

ஆம், அவற்றின் முதுகில் இருக்கும் கட்டி போன்ற அமைப்பிற்குள் பல நாட்களுக்குத் தேவையான கொழுப்பை சேமித்து வைத்துக் கொள்கின்றது.

அத்துடன் வயிற்றினுள் சுமார் 4 லீட்டருக்கு மேலான நீரை சேமித்து வைத்துக் கொள்கிறது.

 தமக்கு இரை தேவைப்படும் போது அவற்றை செமிபாட்டிற்கு அனுப்பும் திறன் இவ் ஒட்டகங் களிடம் இயற்கையாகக் காணப் படுகின்றது.

ஒட்டகங்களின் கண் இமைகளைப் பார்த்தீர்களா னால் நீண்டு அழகாக இருக்கும்.

இதற்கான காரணம், மணல் புயல்கள் நிறைந்த பாலைவனத்தில் அவை பயணிக்கும் போது

அவற்றின் கண்களை தூசுகள்/ மணல்கள் பாதிக்காமல் இருப்பதற் காகவாகும்.

அவற்றின் காதுகளில் இருக்கும் அடர்த்தியான முடிகளும் தூசுகள் காதுக்குள் செல்வதை தடுப்பதற் காகத்தான்.


ஒட்டகங்களின் மூக்கை அவதானித்துப் பாருங்கள் இரு புறமும் அமைந்தி ருப்பதுடன் சவ்வு போன்ற அமைப்பானதாக இருக்கும்.

இவை கூட அவற்றின் சுவாசத்தில் மணல் துகள்கள் இடையூறு செய்வதை தடுப்பத ற்காகத் தான்.

ஒட்டகங்களின் கால்களை அவதானித்துப் பாருங்கள். அடிப்பகுதி தட்டை யானதாக அமைந்தி ருக்கும்.

காரணம் மணலினுள் புதைவதை தடுப்பத ற்காகவே!
ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food ! ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 6/15/2015 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚