பாலூட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருகின்றன உலகில் ஒரு லட்சம் பாலூட்டிகள் இருந்ததாகவும் 
ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் தெரியுமா?
தற்ப்போது நாலாயிரம் பாலூட்டி இனங்கள் மட்டுமே இருப்ப தாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பறக்கக்கூடிய தன்மையை பெற்ற ஒரே பாலூட்டி இனம் வவ்வால்கள் மட்டுமே.

வவ்வால்கள் அதிசயத்தக்க தன்மைகளை தன்னிடம் கொண்டுள்ளது. இரவில் விழித்து பகலில் உறங்கி, மனிதன் நலமுடன் வாழ பல உதவிகளை செய்யும் வவ்வால் இனம், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

பழம் தின்னிகள்

பெரிய கண்கள், குழல் போன்ற மூக்கு , சிறிய காது, இறக்கைகளுக்கு இடையே 20 செ.மி நீளம்,70 கிராம் எடையில் இருக்கும் 

பறக்கும் நரி போன்று கானப்படும் வவ்வால்கள், இந்தியாவில் மட்டுமே காணப்படும்.

இவை 6 அடி நீளம் 2 கிலோ எடை வரை இருக்கும். இவை தேன், பூக்கள், பழங்களை உணவாக உட்கொள்ளும்.

பூச்சிதின்னிகள்
ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் தெரியுமா?
மிளகு போன்று சிறிய கண்கள், ரேடர் பேசின் மாதிரியான காதுகள், தட்டையான மூக்குடன் 6 முதல் 20 செ.மி நீளம் 15 லிருந்து 60 கிராம் எடையுடன் இருக்கும்.

இவற்றில் மிகச்சிறிய  வகையை சேர்ந்த மூங்கில்  வகையை சேர்ந்த வவ்வால்கள் பிலிப்பைன்ஸ் தீவில் கானப்படுகிறது.

இவை மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், பூரான், தேள், பல்லி, எலி போன்றவைகளை உணவாக உட்கொள்கிறது.

ரத்தம் குடிக்கும் வவ்வால்கள்

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் மட்டும், ரத்தம் குடிக்கும் வேம்பயர் வவ்வால்கள் உள்ளது.

இவற்றால் மனிதனுக்கு எந்த தீங்கும் இல்லை , மிருகங்களின் ரத்தத்தை மட்டுமே, அதுவும் ஒரு தடவைக்கு 20 மில்லி மட்டுமே குடிக்கும் . இவற்றின் உமிழ் நீரிலிருந்து மனிதனுக்கு ஏற்படும்.

இதயம் சம்பந்தமான நோய்க்கு டெஸ்மட்டோ பிளாஸ் எனும் மருந்து தயாரிக்கப் படுகிறது.
இது மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுவதை தடுக்கவும், காயங்களி லிருந்து  வெளியேறும் ரத்தம் விரைவாக உறைய வைக்கவும் பயன்படுகிறது.

வவ்வால்கள் கூட்டமாக வாழக்கூடியது, ஒரு சதுர அடியில் 100 கும் அதிகமாக இருக்கும், அமெரிக்காவில் டெக்சாசில் பிராகன் குகையில், 40 மில்லியன் வவ்வால்கள் வாழ்கிறது, 

இவை கூட்டமாக தினமும் 55 கிமீ தூரம் வரை சென்று இறை தேடுகின்றன,

மஸ்டிப் வவ்வால்கள் 
ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் தெரியுமா?
ஒரு இரவில் 250 டன் பூச்சி வண்டுகள் கொசுக்களை உணவாக உட்க்கொள்கிறது, சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரை பிடித்துப் உண்ணக் கூடியவை.

வவ்வால்கள் பழங்களை உண்பதால் அயல் மகரந்தச் நடைபெற பெரிதும் உதவுகின்றன,

இயற்கை வளத்தை காப்பதுடன், உயிர் காக்கும் மருந்து தயாரிக்க பயன்படும் வவ்வால்களை காக்க, குறைந்த பட்சம் இயற்கை வளத்தை மனிதன் அழிக்காமல் இருந்தால் போதும்.