மனதை உருக்கும் தீர்மானம் !

உடல் குறை பாடுடன் பிறந்த தமது சொந்தப் பிள்ளைகளை பெற்றோர் கைவிடும் சூழ்நிலை யில், நபரொருவர் உடல் குறை பாடுடைய இரட்டைக் குழந்தை களை தத்தெடுத்து 
மனதை உருக்கும் தீர்மானம் !
அவற்றுக்கு தனது ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முன் வந்துள்ள சம்பவம் கனடாவில் இடம் பெற்றுள்ளது.  

ஒன்டாரியோ மாநிலத்தைச் சேர்ந்த மைக்கேல் வக்னர் என்ற மேற்படி நபருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்கனவே 5 சொந்த பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் வியட்நாமிய அநாதர வானவர் களுக்கான இல்ல மொன்றி லிருந்து பரம்பரை ரீதியான குறை பாட்டுடன் பிறந்த பின்ஹ் 

மற்றும் புவொக் ஆகிய மேற்படி ஒன்றரை வயது இரட்டைக் குழந்தை களை அவர்கள் தத்தெ டுத்தனர்.

இந்நிலையில் தற்போது 3 வயதாகும் அந்த சிறுமிகளது பாதிக்கப்பட்ட ஈரல்களுக்கு தானமாக வழங்குவதற்கு தனது ஈரல் 

பொருத்த மாகவுள்ளதை மைக்கேல் அண்மையில் அறிந்து தனது ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முன் வந்துள்ளார்.
ஆனால், மருத்து வர்களோ அவரால் வழங்கப்படும் ஈரலின் பகுதியை ஒரு குழந்தைக்கே பொருத்த முடியும் எனவும் இரட்டையர்களில் 

எந்தக் குழந்தைக்கு ஈரலை அவர் பொருத்த விரும்புகிறார் என்பதை அவரே தீர்மானிக்கும் படியும் கூறி அவரை திகைக்க வைத்தனர்.

இந்நிலையில் தற்போது இரு குழந்தை களுக்கும் ஒரே சமயத்தில் அறுவை சிகிச்சையை மேற் கொள்ள ஈரலை தானமாக பெறும் முயற்சியில் மைக்கேல் தீவிரமாக ஈடுபட் டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings