தமிழக இடைத் தேர்தல் - தேர்தல் ஆணையம் விளக்கம் !

0
தமிழகத் தில் காலியாக இருக்கும் 21 சட்டமன்றத் தொகுதி களுக்கு இடைத் தேர்தல் நடக்குமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு, ‘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டப் பேரவை தொகுதி களுக்கு மட்டும் இடைத் தேர்தல் நடைபெறும். 
தமிழக இடைத் தேர்தல்


வழக்கு நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் நடத்தப் படாது' என்று கூறி யுள்ளார். முன்னதாக, 17வது லோக்சபா தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது. மக்களவைத் தேர்தல், 7 கட்டங் களாக நடைபெற உள்ளன என்றும் முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டது. 

7-ம் கட்ட தேர்தல் 19 ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அனைத்து கட்ட தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஏப்ரல் 19, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12 மற்றும் மே 19 தேதிகளில் 2 முதல் 7 ஆம் கட்ட தேர்தல்கள் நடக்கும். 

ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் (39 தொகுதிகள்) மற்றும் புதுச்சேரியில் (1 தொகுதி) லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில், சட்டமன்றத் தேர்தலும் லோக்சபா தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings