அம்மா இலவச செல்போன்?

சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்கள் வழங்கப்படும் 
என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்து இருந்தார். 

அதில் இலவச செல்போன் பற்றிய அறிவிப்புதான் பெரும்பாலோனோரை கவர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்தாலும் வந்தது, மக்கள் இது சாத்தியமா? தரமானதாக இருக்குமா? யார் டாப் அப் செய்வார்கள் என்று பேசத் துவங்கிவிட்டனர்.

முதல்ல நல்ல ரேசன்கார்டை கொடுக்கச் சொல்லுங்க... அப்புறம் ரேசன்கார்டுக்கு செல்போன் கொடுக்கறதைப் பற்றி பேசலாம் என்பதும் பலரது கருத்தாக உள்ளது. 

அம்மா இலவச செல்போனில் எப்படி பேச வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் வகை வகையாய் வரிசை கட்டி அடிக்கிறார்கள். படிங்க... சிரிங்க... 

•செல்போனில் அம்மா குறித்த பாடல்தான் ரிங் டோனாக வைக்கப்பட்டு இருக்கும். 

•செல்போனில் லாக் ஸ்கிரீன், அன்லாக் ஸ்கிரீன் இரண்டிலும் ஜெ. படம் மட்டுமே இருக்கும். 

•ஜெ., படத்தைப் பார்த்து குனிஞ்சி வணக்கம் சொல்லணும் அப்பதான், செல்போனில் பேச முடியும். 

•அம்மா வாழ்க என்று சொன்னால் கால் அன் லாக் ஆகும்,

•கலைஞர் ஒழிக என்று சொன்னால் கால் லாக் ஆகும் என்று வாட்ஸ் அப்புகளில் நகைச் சுவையாக செய்திகள் உலா வருகின்றன. 

இதாவது பரவாயில்லை, ''அம்மா கைபேசி'' என்ற பெயரில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் செல்போன் பாக்ஸ்கள் தயாரித்து அதையும் படம் எடுதது போட்டுள்ளனர். 

இதுவும் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. இதைப் பார்க்கும்போது, அடுத்து ஜெயலலிதாதான் ஆட்சிக்கு வருவார்கள் என்று நம்பி! 

இப்போதே செல்போனுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்களா? அல்லது இவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க வாங்கி வைத்துள்ள செல்போன்களா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings