திருச்சியில் பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டிகொலை - மிட்டாய் பாபு கேங் !

மார்க்கெட்டிலேயே ஓட ஓட விரட்டி... பாஜக பிரமுகரை வெட்டி கொன்றுள்ளார் மிட்டாய் பாபு.. 
மிட்டாய் பாபு கேங்


இந்த சம்பவத்தி னால் பாஜக தொண்டர்கள் கொதிப் படைந்து, மிட்டாய் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை உடனடியாக கைது செய்யக் கோரி தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. 

இதனால் திருச்சி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. க செயலாளராக பதவி வகித்தவர்..

காந்தி மார்க்கெட்டில் இருசக்கர நுழைவு பகுதியில் டூவீலருக்கு சீட்டு வழங்கும் வேலையை செய்து வந்தவர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் விஜய் ரகு மார்க்கெட் சென்றார்.. அப்போது மிட்டாய் பாபு என்பவர் 5 பேர் கொண்ட கும்பலுடன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. 
உயிரை கையில் பிடித்து கொண்டு விஜய் ரகு தப்பி முயல.. மார்க்கெட்டு க்குள் ஓட ஓட விரட்டி அவரை அரிவாளாலேயே வெட்டி கொன்றுள்ளனர் மிட்டாய் பாபு & கோ!

பொது மக்கள் கண் முன்னாடியே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் விஜய் ரகு.. தகவல் அறிந்து காந்தி மார்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பாஜக பிரமுகர்


ஆனாலும் விஜயகுரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வருவதுடன், தப்பி ஓடிய மிட்டாய் பாபுவை தேடி வருகின்றனர். 

எதனால் இந்த கொலை என்று தெரிய வில்லை.. முன் விரோதம் காரணமாகவே படுகொலை நடந்ததாக சொல்கிறார்கள்.

மிட்டாய் பாபு ஒரு லாட்டரி வியாபாரி என்கிறார்கள். இவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கொலை பாஜகவி னரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்க மிட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings