மகன் என்ற அடையாளத்தில் இருந்து கட்சி தலைவர் அடையாளம் !

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் 
ஒருவரான மூப்பனாரின் மகன் என்ற அடையாளத்துடன் அரசியல் வாரிசாக களமிறங்கியவர் வாசன். தற்போது தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியாக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறார். 

மூப்பனார் வாரிசு... மூத்த காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவரான ஜி. கே. மூப்பனாரின் மகன் வாசன்.

இவர் கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பிறந்தவர். சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிறுவன செயலியல் பட்டம் பெற்றார். 

மூப்பனாரின் மறைவு... 

1996ம் ஆண்டு மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை உருவாக்கினார்.

அதனைத் தொடர்து கடந்த 2001ம் ஆண்டு மூப்பனாரின் மறைவிற்குப் பின் கட்சிப் பொறுப்பு அவரது மகன் வாசன் வசம் வந்தது.

பொறுப்புகள்... 

பின்னர் அக்கட்சியை மீண்டும் அவர் தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் அவர் பதவி வகித்தார்.

மத்திய அமைச்சர்... 

இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற வாசன், மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும், மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 

கோஷ்டி பூசல்... 

தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை. ஜி.கே.வாசன், சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு என அவரது ஆதரவாளர்கள் என்பது மட்டுமின்றி சிறு சிறு கோஷ்டி தலைவர்களாகவும் பலர் செயல்பட்டனர், தற்போதும் அதே நிலை தொடர்கிறது.

இந்த நிலையைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளியேறினார் வாசன். 
தனிக்கட்சி உதயம்... 

அதன் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி தமிழ் மாநிலக் காங்கிரஸ் (மூப்பனார்) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் வாசன். தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் தற்போது தமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings