நாங்க செத்தா 3 பிள்ளைகளும் கொள்ளி வைக்க கூடாது... பசி கொடுமை.. தற்கொலை !

கடைசி காலத்தில் பெற்ற பிள்ளைகள் கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அந்த காலம் போல.. பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. 
நாங்க செத்தா 3 பிள்ளைகளும் கொள்ளி வைக்க கூடாது

"எங்க சடலங்களுக்கு பிள்ளைகள் 3 பேருமே கொள்ளி வைக்கக்கூடாது" என்று ஒரு லட்டரையும் போலீசுக்கு எழுதி வைத்து விட்டு இறந்துள்ளனர்.

சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் குணசேகரன் - செல்வி தம்பதி.. இவர்களுக்கு 3 மகன்கள்.. இதில் 2 மகன்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.. 

அவர்கள் 2 பேரும் கல்யாணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் போய் விட்டனர்.. கடைசி மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. அதனால் தம்பதியுடனேயே அவர் வசித்து வந்தார்.
ஆனால், அந்த மகனும் வீட்டு செலவுக்கு காசு தருவதில்லையாம்.. பணம் தராததால் வீட்டில் மளிகை உட்பட எந்த பொருளும் இல்லை.. 

இதனால் பசியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.. அதனால், வயதானதையும் பொருட்படுத்தாமல், செக்யூரிட்டி வேலைக்கு போனார் குணசேகரன்.

இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டு விட்டது.. அதனால் அந்த வேலையும் பறிபோனது.. இதனால் வறுமை அவர்களை வாட்டியது.. பசி அவர்களை துரத்தியது.. 
பசி கொடுமை

கடைசியில் 2 பேரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்... இந்த தகவல் கிடைத்ததும், செம்பியம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அந்த வீட்டில் ஒரு லட்டர் கிடைத்தது.. அதை தற்கொலைக்கு முன்பு 2 பேரும் எழுதி வைத்திருந்தனர்.

"நாங்க சாவதற்கு யாரும் காரணமில்லை.. ஆனால், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு கொள்ளி போட வேணாம்.. எங்கள் சடலத்தை அனாதை பிணங்களாக அடக்கம் செய்து விடுங்கள்.. 
எங்களை போலீசார் தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்று எழுதியிருந்தனர்.. இதை யடுத்து, 2 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை யடுத்து, அவர்களது ஆசைப்படியே உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில், சடலங்கள் அடக்கம் செய்யப்படும் என்று போலீசாரும் தெரிவித்துள்ளனர். 
சடலங்கள் அடக்கம்

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த லாக்டவுன் எண்ணற்ற பாடங்களை கற்று தந்து கொண்டிருக்கிறது.. 

கொடிய கொரோனாவை விடவும், சில மனித மிருகங்களின் நடவடிக்கைகள் நமக்கு கடுமையான அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. மனிதாபிமானத்தின் எல்லைகள் எதுவென்று கூட நம்மால் எடை போட முடியவில்லை.. 
சாகும் போதுகூட பெற்ற பிள்ளைகளை அம்மாவும், அப்பாவும் காட்டி தரவில்லை என்பதை இது போன்ற நன்றி கெட்ட மனிதர்கள் உணர வேண்டும்... ஆனால் எல்லா வற்றையும் வென்று விடுகிறது.. "பசி" !
Tags: