கொட்டாவி எமது சுறுசுறுப்பினை அதிகரிக்கும் !

நம்மோடு பேசிக் கொண்டிருப் பவர்கள் தொடர்ந்து உரையாடும் போதோ, நமக்கு சுவாரஸ்ய மில்லாத வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையிலோ, 
 கொட்டாவி


நம்மையும் அறியாமல் வாயை மெதுவாக அதே சமயம் வெகு பெரிதாக ‘ஹோவ்’ என்ற ஓசையுடன் கொட்டாவி விடுகிறோம்.

இந்த செயலுக்கான பின்னணி என்ன? என வெகு ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த உடல் கூற்றியல் வல்லுனர்கள், தற்போது அதற்கான காரணத்தை கண்டறிந் துள்ளனர்.

உறக்கத்திற் கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் இதைப் போல் அடிக்கடி வரும் கொட்டா வியானது, சூடாகிப் போன நமது மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக திகழ்வதாக இந்த ஆய்வை மேற்கொண்ட டொக்டர் நிக் நைட் என்பவர் உறுதிப் படுத்தி யுள்ளார்.

மேலும், நமது நுரையீரலில் தேங்கிப்போன அளவுக் கதிகமான கரியமில வாயு (காபன் டைஒக்சைட்) கொட்டாவிகளின் மூலம் வெளியேற் றப்பட்டு, புதிய பிராண வாயுவை (ஒட்சிசன்) 

நுரையீரல் உள்வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு கொட்டாவிக்குப் பின்னரும் நமது விழிப்புணர்வு சார்ந்த சுறுசுறுப்பு அதிகரிப் பதாகவும் குறிப் பிட்டுள்ளார்.
Tags: