முஸ்லிம் வியாபாரிக்கு தொல்லை.. டிவி சேனலும் உடந்தை.. போலீசில் பரபர புகார் !

தள்ளு வண்டியில் திராட்சை பழம் விற்பனை செய்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு வியாபாரி, மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ள சம்பவம் பெங்களூரு நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
முஸ்லிம் வியாபாரிக்கு தொல்லை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வெளியே செல்ல அஞ்சி வீட்டுக்குள் இருக்கக்கூடிய இந்த நிலையில், 

தள்ளு வண்டிகளில் வரக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகள் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்களித்து வருகிறது. 

ஆனால் இதிலும் மதரீதியாக பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்துள்ளது அம்பலமாகி யுள்ளது.
பெங்களூரு ஜேபி நகர் என்ற பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தள்ளு வண்டியில் திராட்சை பழங்களை விற்பனை செய்து வந்தார். 

அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் அவரை வழிமறித்து, நீங்கள் திராட்சையில் எச்சிலை துப்பி அதை விற்பனை செய்வதை நான் பார்த்தேன். 

உங்கள் முகத்தைக் காட்டுங்கள், என்று செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.

வீடியோவே குறி
வீடியோவே குறி

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி, ஐயா நான் சாலையோரமாக தான் எச்சில் துப்பினேன். திராட்சை மீது துப்பில்லை, விட்டு விடுங்கள் என்று கூறி கையெடுத்துக் கும்பிட்டார். 

ஆனால் வீடியோ பதிவு செய்யும் நபர் அதை விடுவதாக இல்லை. தொடர்ந்து அவரது முக கவசத்தை அகற்றுமாறு கூறி முகத்தை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தார்.

கன்னட டிவி சேனல்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. கன்னட செய்தி சேனல், 'டிவி5' இதை ஒளிபரப்பியது. "திராட்சை மீது எச்சில் துப்பும் இந்த வியாபாரியின் நோக்கம் என்ன? 
இந்த தகவல் போலீசாருக்கு போனதோ இல்லையோ நமக்கு தெரியவில்லை. இதுபோல பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.." 

இவ்வாறு அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளர் உச்ச ஸ்தாபியில் கத்தி பேசும் வீடியோவும் தற்போது பலரது செல்போன்களில் சுற்றி வருகிறது.

வியாபாரிகள் சங்கம்
வியாபாரிகள் சங்கம்

இந்த நிலையில்தான் பெங்களூரு, தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் பெங்களூரு போலீஸ் கமிஷனர், பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் அளிக்கப் பட்டுள்ளன. 

இது தவிர, இந்த சங்கத்தின், வினய் சீனிவாசா என்பவர் சார்பில், ஜேபி நகர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வில்லை.

டிராபிக் ஜாம் குற்றச்சாட்டு

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெரு வியாபாரிகள் என்றாலே அவர்கள் சுகாதார மற்றவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். 
அவர்களால் டிராபிக் ஜாம் ஆகும், விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையை மறித்து கொள்வதாக கூறி அவ்வப்போது காவல்துறை யினரால் தொல்லைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.

மதம், ஜாதி பாகுபாடு இல்லை

நியாயமான விலையில் பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது. தெருவோர வியாபாரிகள் தான் நாங்கள் ஜாதி மதம் இனம் என எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கிறோம். 
மதம், ஜாதி பாகுபாடு இல்லை

ஆனால் இப்போது அங்கேயும் மதத்தை வைத்து பிளவுபடுத்தும் மோசமான காரியம் அரங்கேறியுள்ளது. 

அதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். வீடியோ எடுத்த நபரின் குரல் மற்றும் அவர் செயல்பட்ட விதத்தை பார்க்கும் போது, அவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்துள்ளது தெளிவாக தெரிகிறது.

புகார்கள்

வியாபாரி களுக்கெதிராக மத பிரச்சினையை தூண்டுவதற் கான முயற்சியாகவே தெரிகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
இந்த வீடியோ காட்சியில் திராட்சை விற்பனை செய்பவர் துப்பும் காட்சி இடம் பெறவில்லை. 

எனவே ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை பெருவாரியான மக்களிடம் பரப்பியதற் காக, கன்னட டிவி சேனல் மற்றும் கர்நாடகா சங்கி என்ற ஒரு ட்விட்டர் கணக்கு ஆகியவற்றின் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.
Tags: