கொரோனா.. பதை பதைக்கும் காட்சி.. பெங்களூர் நிலைமை?

மிக சோகமான ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் மோசமாக, பாதித்த மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. 
கொரோனா.. பதை பதைக்கும் காட்சி


அதிலும், தலைநகர் பெங்களூர், ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ள பகுதி என்பதால், வெளிநாட்டில் இருந்து, ஒருவரிடமிருந்து எளிதாக நிறைய பேருக்கு பரவிவிட்டது.

அவர்களுக்கு தனிமைப் படுத்தப்பட்ட வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நோய் பரவல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இது பெங்களூரில் எந்த பகுதி என்று தெரிய வில்லை. 
ஆனால் ஒரு நபர் தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உணர்ந்து ஆம்புலன்சுக்கு போன் செய்து அதை சம்பவ இடத்திற்கு வர வைக்கிறார்.

ஒரு சாலை அருகே அவர் நின்று கொண்டிருக்க.. அங்கு வரும் ஆம்புலன்சில் ஏறி உட்காருகிறார். இதன்பிறகு ஆம்புலன்ஸ் கதவுகள் பூட்டப்பட்டு வண்டி நகர்கிறது. 

இதை அருகே இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


அந்த ஆம்புலன்ஸ், எம்.எஸ்.ராமையா என்ற தனியார் மருத்துவ மனைக்கு சொந்தமானது. 

இது பெங்களூரில் யஸ்வந்தபுரம் என்ற, பகுதியில் அமைந்துள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர் உடலை முழுக்க மறைக்கும் ஆடையை அணிந்தபடி, முகக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்கிறார்.
வெளியே பொருள் வாங்க வந்தவர் கூட வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் காட்சி நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது.
Tags: