காவியில் திருவள்ளுவர் எதிர்ப்பு கிளம்பியதால் புகைப்படத்தை மாற்றிய வெங்கையா !

0
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு பதிவிட்டிருந்தார்.
காவியில் திருவள்ளுவர்


வெங்கையா நாயுடுவின் பதிவில் காவி நிற உடையில், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, நெற்றியில் விபூதி தரித்திருந்த திருவள்ளுவரின் புகைப்படம் பதிவிடப் பட்டிருந்தது. 

இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது கண்டனங் களைப் பதிவு செய்தனர். தமிழக அரசு வெளியிட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தை மாற்றுமாறு கருத்துகள் பதிவிடப்பட்டன.

காவி உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தனது பழைய பதிவை நீக்கிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காவி உடை இல்லாமல் இருக்கும் திருவள்ளுவரின் புகைப் படத்தை பதிவிட்டார்.

மேலும் அந்த பதிவில், “சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவ வாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். 

அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனித குலத்திற்கு வழி காட்டுகிறது.


அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங் களில்

மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழி காட்டுகிறது. 

இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்த மானதாக திகழ்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் இன்று பதிவிடப் பட்டுள்ளது. 

ஏற்கெனவே இது போல் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப் படத்தை பாஜக வெளியிட்டு அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி யிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)