ஹிட்லர் யூதர்களை அழித்தார்.. இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைக்கிறார்ங்கள்.. துரைமுருகன் !

0
"ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவங்க இஸ்லாமியர்களை குறி வெக்கிறாங்க.. ஹிட்லருக்கும், இவங்களுக்கும் என்ன வித்தியாசம்? 
ஹிட்லர் யூதர்களை அழித்தார்


இப்போ ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறாங்க" என்று திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கடுமையான விமர்சனத்தை வெளிப் படுத்தினார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய வற்றுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து வருகின்றன.. 

இவை இரண்டுமே இன்றுவரை பேசு பொருளாக தேசத்தில் உருவெடுத்து வருகின்றன.
மாணவர்கள் முதல் மாநில கட்சிகள் வரை தங்களது எதிர்ப்புகளை பேரணி, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்..


அந்த வகையில், மனித நேய மக்கள் கட்சி மாநாடு நடத்தி, இதற்கான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

இந்த மாநாடு வேலூர் மண்டித்தெருவில் நடைபெற்றது.. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு தலைமை தாங்கினார்... 

திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அப்போது துரை முருகன் பேசிய போது, "நீங்க இந்த நாட்டில் பிறந்தவர்கள்... இந்தியா உங்கள் தாய்நாடு.. இந்த நாட்டில் எத்தனையோ இனங்கள் இருக்கின்றன.. 
அது போல் நீங்களும் ஒரு இனம். மதத்தால் வேறு பட்டவர்கள், அவ்வளவு தான், வேறு ஒன்னு மில்லை.

ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவங்க இஸ்லாமியர் களை குறி வெக்கிறாங்க.. ஹிட்லரு க்கும், இவங்களுக்கும் என்ன வித்தியாசம்? இப்போ ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறாங்க.. 

இது இஸ்லாமியர் களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கு மான எச்சரிக்கை தான் அதனால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இதனை எல்லாரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்" என்றார்.


இதை தொடர்ந்து அழகிரி பேசும் போது,"திமுக, காங்கிரஸ் கூட்டணி பலமாகவே உள்ளது.

இந்தக் கூட்டணி உடைந்த கண்ணாடி என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார்.. 

அதிமுகவில் செல்லூர் ராஜு தான் விஞ்ஞானி என்று பார்த்தால் ஜெயக்குமாரும் விஞ்ஞானியாகத் தான் இருக்கிறார்" என்று தமாஷாக கூறினார்.

கூட்டணி விரிசல், கூட்டணியில் பிளவு என்று சில தினங்களுக்கு முன்பு பரபரக்கப் பட்டது.. குறிப்பாக துரைமுருகனின் பேச்சுதான் சலசலப்பின் வீரியத்தை கூட்டி விட்டது.. 
ஆனால் அழகிரி, திமுக தலைவரின் சந்திப்பின் போதே இந்த புரளிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. என்றாலும், இந்த மாநாட்டில் துரை முருகனும் அழகிரியும் மேடை யிலேயே கைகுலுக்கிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப் படுத்தியது, 

மிச்சம் மீதியிருந்த அரசல் புரசல்களையும் அடித்து கொண்டு போய் விட்டது!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)