அமேசான் உரிமையாளர் போனை ஹேக் செய்தாரா சவுதி இளவரசர்?

0
அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் மொபைல் போனை சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உளவு பார்த்ததாக கார்டியன் நாளிதழில் செய்திகள் வெளியாகி யுள்ளது. 
அமேசான் உரிமையாளர் போன்


இது உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திகழ்ந்து வருகிறார். 

அவர் குறித்து கார்டியன் வெளியிட்ட செய்தியில், ‘ஜெஃப் பெசோஸுக்கும் முகமது பின் சல்மானுக்கும் இடையிலான நட்பு அடிப்படை யிலான வாட்ஸ்அப் மெசேஜ் பகிர்வின் போது, 

வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை பெசோஸுக்கு முகமது பின் சல்மான் அனுப்பி யுள்ளார். 

பின்னர், ஒரு மணி நேரத்தில் பெசோஸின் போனி லிருந்து ஏராளமான தகவல்கள் எடுக்கப் பட்டுள்ளன’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் அந்தச் செய்தியில், ’பெசோஸின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும் போது,

சவுதி அரேபியா அரசு பெசோஸின் மொபைல் போனை பயன்படுத்தி, அதிலிருந்து தகவல் களை எடுத்துள்ளது. 
சவுதி அரேபியா பெசோஸின் போனில் ஊடுருவி யுள்ளது என்று எங்களுடைய விசாரணை அதிகாரிகள் மற்றும் பல வல்லுநர்கள் உச்சகட்ட நம்பிக்கை யுடன் உறுதி படுத்தி யுள்ளனர்’ என்று தெரிவித்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது.


இது குறித்து விளக்க மளித்துள்ள சவுதி அரேபிய அரசு, ‘ஜெஃப் பெசோஸின் மொபைல் போன் ஹேக் செய்யப் பட்டதன் பின்னணியில் சவுதி அரேபியா உள்ளதாக வெளியான செய்திகள் அபத்தமானது. 

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.

அப்போது தான் நாம் இது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்’ என்று குறிப்பிட் டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)