நரேந்திர மோடி அக்குபிரஷர் ரோலர் கருவி வைத்திருந்தது ஏன்?

0
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவளம் கடற்கரையில் சுற்றும் போது, அங்குள்ள குப்பையைக் கண்டு அதை ஒரு பையில் சேகரித்தார். 
மோடி கையில் அக்குபிரஷர் ரோலர் கருவி


அந்த போட்டோ இணைய தளத்தில் வைரலாக உலகம் முழுவதும் பரவியது. பிரதமர் மோடி 60 வயதை எட்டியப் பிறகும், அவர் ஒரு இளைஞனை விட பிட்டாக காட்சி யளிக்கிறார். 

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சரி, மோடி அவர்கள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது கையில் ஒரு குச்சியை வைத்திருந்ததை பலரும் கவனித் திருப்பீர்கள். 

அது என்னவாக இருக்கும் என்றும் பலர் சிந்தித்துக் கொண்டி ருப்பீர்கள். பலர் அது என்ன வென்று மோடி அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். 

அந்த கேள்விக்கு பிரதமர் மோடி அவர்களே, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலையும் அளித்து விட்டார்.

டிவிட்டர் பக்கத்தில் மோடியின் பதில்,

"கோவளம் கடற்கரையில் வாக்கிங் சென்ற போது, நான் கையில் வைத்திருந்த கருவி என்ன வென்று பலர் என்னிடம் கேட்டார்கள். நான் கையில் வைத்திருந்தது அக்கு பிரஷர் ரோலர் கருவியாகும். 

அதை நான் அடிக்கடி பயன் படுத்துவேன். அதைப் பயன்படுத்துவது எனக்கு பிடிக்கும். அந்த கருவியைப் பயன்படுத்தும் போது மனம் அமைதியாக இருக்கும்" என குறிப்பிட் டிருந்தார்.
டிவிட்டர் பக்கத்தில் மோடியின் பதில்


தற்போது பிரதமர் மோடி பயன்படுத்தும் அக்குபிரஷர் ரோலர் மிகவும் பிரபலமாகி யுள்ளது. மேலும் சமீப காலமாக மக்களுக்கு அக்கு பிரஷர் சிகிச்சை யின் மீது ஆர்வம் அதிகரித்து விட்டது. 

ஏனெனில் இந்த சிகிச்சை யின் மூலம் பில பிரச்சனைகளை சரிசெய்ய முடிகிறது.

அக்குபிரஷர் ரோலர் என்றால் என்ன?

அக்குபிரஷர் என்பது ஒரு பழங்கால மசாஜ் தெரபி ஆகும். இந்த முறையில் உடலின் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல ஆரோக்கிய பிரச்சனை களுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. 

அக்குபிரஷர் ரோலர் என்பது உடலில் உள்ள நரம்புகளைத் தூண்டிவிட மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு கருவி யாகும். மேலும் இந்த கருவி மனம் மற்றும் உடல் தொடர்பான வியாதிகளை போக்க உதவுகிறது.
அக்குபிரஷர் ரோலர் என்றால் என்ன?
அதுவும் நீங்கள் ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, அவை செயல் படுத்தப்பட்டு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது, ஒரு நிம்மதியான உணர்வைப் பெறுவீர்கள். இப்போது அக்குபிரஷர் ரோலரால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

தசைகள் ரிலாக்ஸாகும்

அக்குபிரஷர் உடலில் உள்ள வலி மற்றும் டென்சனைக் குறைக்கும் அற்புதமான வழியாகும். இது பல்வேறு உறுப்புக்களின் செயல் பாட்டைத் தூண்டி விட்டு, மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தத்தைக் குறைக்க உதவும். 
தசைகள் ரிலாக்ஸாகும்


அக்குபிரஷர் ரோலரை ஒருவர் கையில் எப்போதும் வைத்திருந்தால், எப்போ தெல்லாம் டென்சனாக உணர்கிறீர்களோ, அப்போது இதைக் கொண்டு கைகளில் அழுத்தம் கொடுங்கள்.

இரத்த சர்க்கரை சீராகும்

அக்குபிரஷர் ரோலர் உடலில் இரத்த க்ளுக்கோஸ் அளவை சமநிலையில் பராமரிக்க உதவும். நமது பாதங்களில் உள்ள சில அழுத்தப் புள்ளிகள், கணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. 
இரத்த சர்க்கரை சீராகும்
ஆகவே பாதங்களில் அக்குபிரஷர் ரோலர் கொண்டு அழுத்தம் கொடுக்கும் போது, இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவு சம நிலைப்படும்.

செரிமான ஆரோக்கியம்

அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவஸ்தைப் படுபவர்கள், அக்குபிரஷர் ரோலர் பயன் படுத்துவது மிகவும் நல்லது. இது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளைச் செயல்படச் செய்து, செரிமானத்தை மேம்படுத்து கிறது. 
செரிமான ஆரோக்கியம்


ஒருவர் தொடர்ந்து அக்குபிரஷர் ரோலரைப் பயன்படுத்தி னால், வயிற்றில் உள்ள தொற்றுக்கள் எளிதில் மற்றும் விரைவில் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்

அக்குபிரஷர் மன அழுத்தம் மற்றும் டென்சன் என அனைத்தில் இருந்தும் விடுவித்து, நல்ல ரிலாக்ஸான மனநிலையைத் தரும். ஒருவர் ரிலாக்ஸாக இருந்தால், 
நிம்மதியான தூக்கம்
இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். அக்குபிரஷர் ரோலர் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஒட்டு மொத்த செயல் பாட்டையும் சீராக்கும். 

தினமும் அக்குபிரஷர் ரோலரைப் பயன் படுத்தினால், தூக்க மின்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)