தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்கா ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்கா !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. உணவு கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது. மனித உடல் 60 சதவீத நீரால் ஆனவை.
தென் ஆப்பிரிக்கா தண்ணீர் பஞ்சம்


இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருகிறோம். 

இந்த பிரச்சனை இந்தியாவுகு மட்டு மில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளின் முக்கிய பேசும் பொருளாக மாறி விட்டது. 

இதற்கான முன்னேற்பா டுகள் உலக அரங்கில் எடுத்து வைத்தாலும் இன்றைய நிலமைக்கு அது பத்தோடு பதினொன்று தான்.

காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்ப நிலையால் ஜீரோ டே வாட்டர் பிரச்சனையை சந்தித்த கேப் டவுன் இப்பொழுது தென் ஆப்பிரிக்கா வில் உள்ள கிராஃப் ரெயிண்ட் நகரமும் சந்தித்து வருகிறது. 

40 லட்ச மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய Nqweba Dam முற்றிலும் வரண்டு விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மழை பொழிவே இல்லை என்பது தான் நிதர்சனம்.


இதனால் பல கால்நடைகள் மற்றும் மீன்கள் செத்து வீழ்கிறது.

நீர் பிரச்சனையை காரணம் காட்டி இங்குள்ள பள்ளி குழந்தை களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

இங்குள்ள மக்கள் பெரிது நம்புவது ஆழ்துளை கிணறுகளே. இதுவரை 1800 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் வற்றக் கூடியவை தான். 

அதுவும் வற்றி விட்டால் இந்த மக்களின் நிலை கேள்விக் குறியே. இதனை கருத்தில் கொண்ட அந்நாட்டு அரசும், ஐ.நா-வும் நீரை சிக்கனமாக பயன்படுத்து மாறு தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்கா ! தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்கா ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 12/11/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚