புரோஸ்டேட் புற்றுநோயிற்குரிய நவீன சிகிச்சை !

0
ஆண்களின் வயிற்றுப் பகுதியில் அமைந்திருக்கும் கடைசி உறுப்பாகவும், பாலின சுரப்பியாகவும் செயற்படும் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்று நோய்க்கான நவீன சிகிச்சை கண்டறியப் பட்டிருக்கிறது.
புரோஸ்டேட்
1990கள் முதல் தற்போது வரை ப்ராஸ்டேட் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 200% அதிகரிப்ப தாகவும், 

இந்த நோய் முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்பட்டது என்றும், தற்போது 40 வயது நிரம்பிய ஆண்களுக்கு ஏற்படுகிறது என்றும் கண்டறியப் பட்டிருக்கிறது.

40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பு ஏது மில்லாமல் சிறுநீர் கழித்தலில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது சிறுநீருடன் இரத்தப் போக்கு காணப் பட்டாலோ உடனடியாக P S A எனப்படும் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். 
ப்ராஸ்டேட் புற்றுநோய்
இந்த பரிசோதனை செய்து கொண்டால் புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப் பிருக்கிறதா? அல்லது புற்றுநோய் தொடக்க நிலையில் இருக்கிறதா? அல்லது எந்த நிலையில் இருக்கிறது? என்பதனை துல்லியமாக கண்டறிய லாம்.

இத்தகைய புற்றுநோய் கிராமப் புறங்களில் வாழும் ஆண்களை விட, நகர்ப் புறங்களில் வாழும் ஆண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. 
அதே தருணத்தில் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஆண்களைக் காட்டிலும் மேலைத்தேய உணவு கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஆண்களுக்கு அதிக அளவில் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கண்டறியப் பட்டிருக்கிறது.

சிலருக்கு ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் காரணமாகவும் அங்கு புற்று நோய் ஏற்படக்கூடும். சிகரெட் புகைப் பவர்களுக்கு இத்தகைய புற்று நோயின் தாக்கம் அதிகம் இருப்பதையும் காண முடிகிறது. 
புராஸ்டேட் சுரப்பி
புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பெறா விட்டால் அது உடலின் பிற பாகங்களுக்கு பரவி குறிப்பாக எலும்பு களுக்குள் ஊடுருவி விட்டால்.. முதுகுவலி மற்றும் கால்கள் செயலிழப்பு போன்றவை ஏற்படக் கூடும்.

நோயாளியின் வயது, உடலில் உள்ள கோளாறுகள் ஆகிய வற்றை பொறுத்து அவருடைய புராஸ்டேட் சுரப்பி முற்றிலுமாக அகற்றி,

அதனை சிறுநீர் பையுடன் இணைக்கும் சத்திர சிகிச்சையை செய்து இத்தகைய புற்று நோய்க்கு முழுமையான தீர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தற்போது பாதுகாப்பான முறையிலும் மேற்கொள்ளப் படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சை தற்பொழுது றொபாடீக் மூலமாக மேற்கொள் வதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப இயலுகிறது.

நுண் கதிர்வீச்சு என்ற சிகிச்சை மூலமும் இதனை முழுமையாக குணப்படுத்த இயலும். 
நுண் கதிர்வீச்சு என்ற சிகிச்சை
சிலருக்கு மட்டும் மிக அரிதாக ஆண் தன்மையை கொண்ட டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹோர்மோனின் அளவை முழுமையாக கட்டுப் படுத்தி, 

இந்த புற்று நோயின் பரவலை கட்டுப்படுத்த இயலும். இதன் மூலம் புற்று நோய்க்கு சிறந்த நிவாரண த்தையும் வழங்க இயலும்.

எந்த நிலையில் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதனை முழுமையாக குணப்படுத்த இயலும். 

ஆனால் இது குறித்த விழிப்புணர்வு படித்த மற்றும் பாமர ஆண்களிடம் முழுமையாக ஏற்பட வில்லை என்பது தான் யதார்த்தம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)