சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் !

Subscribe via Email

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 
சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. 

அதன் பின்னர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாச த்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 
வி
சச்சின், சேவாக்

ளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் இரட்டைச் சதம் மற்றும் மார்னஸ் லாபுசாக்னேவின் 162 ரன்களால் வலுவான நிலையில் உள்ளது.

மார்னஸ் லாபுசாக்னே வின் ஆட்டமிழந்த பின் நட்சத்திர ஆட்டக் காரரான ஸ்டீவ் ஸ்மித் களமிறங் கிறங்கினார்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்கள் எடுத்த போது 

டெஸ்ட் கிரிக்கெட்டு களில் அதிவேக மாக 7 ஆயிரம் ரன்கள் எடுத்து 73 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 

126 இன்னிங்ஸ் களில் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸ் ளில் 7 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையாக இருந்தது. 
ஸ்டீவ் ஸ்மித்

மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனான டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகள் ரன்களையும் (6,996 ரன்கள்) முந்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் முறையே தங்களது 134வது மற்றும் 136வது இன்னிங்ஸ் களில் 7,000 ரன்கள் கடந்தனர்.

விராட் கோலி மற்றும் இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா ஆகியோர் தங்களது 138 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தனர். 

சுனில் கவாஸ்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவியன் ரிச்சார்ட்ஸ் தனது 140 வது இன்னிங்சில் 7,000 ரன்கள் கடந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close