பிரதமருடன் கைகுலுக்குவது போல் கிராபிக்ஸ் செய்த வாலிபர் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

பிரதமருடன் கைகுலுக்குவது போல் கிராபிக்ஸ் செய்த வாலிபர் !

Subscribe via Email

கோவை பீளமேடு புதூர் பகுதியை சேர்ந்தவர் கவி தமிழ் செல்வன் (42). இவர் தன்னை நுகர்வோர் அமைப்பு நிர்வாகி என கூறி வந்தார். 
பிரதமருடன் கைகுலுக்குவது போல் கிராபிக்ஸ்

இதனை பயன்படுத்தி அரசு அலுவலகங் களுக்கு சென்று உயர் அதிகாரி களுடன் செல்பி எடுத்து அவர்கள் தனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் 

என்பதை காட்டிக் கொள்ள உயர் அதிகாரி களுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார்.

கடந்த மாதம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது மோடியுடன் சீன அதிபர் பேசுவது போன்ற புகைப்படம் வெளியானது.

அதில் சீன அதிபர் படத்தை அகற்றி விட்டு கவி தமிழ் செல்வன் பிரதமர் மோடியுடன் கைக் குலுக்குவது போன்ற

படத்தை கிராபிக்ஸ் செய்து வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பதிவிட் டுள்ளார்.

இதனை பார்த்த பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்தனர்.

மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கவி தமிழ் செல்வனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அப்போது அவர் மோடியுடன் கைக் குலுக்குவது போன்ற புகைப் படத்தை

கோவை வரதராஜ புரத்தில் உள்ள கடையில் கிராபிக்ஸ் செய்து வெளி யிட்டதாக கூறி உள்ளார்.

அவர் பல உலக தலைவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரா? 

என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close