ஐ.டி.ஊழியர்களுக்கு சப்ளை செய்யும் கஞ்சா டோர் டெலிவரி !

0
சென்னையில் ஐடி ஊழியர்களை குறிவைத்து இரு சக்கர வாகனத்தில் சென்று கஞ்சா டோர் டெலிவரி செய்யும் கும்பலை சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 
ஐ.டி.ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை


வீட்டில் வைத்து கஞ்சா பொட்டலம் போட்டு விற்று வந்த ஐடி ஊழியரும், ஐஐடி ஊழியரும் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்....

சென்னையில் கஞ்சா விற்பதை ஒரு சாரர் தான் செய்து வருகிறார்கள்,

குறிப்பிட்ட சில பகுதிகளில் தான் புழங்குகிறது என்ற நிலை மாறி, டிப் டாப் உடை அணிந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கஞ்சா விற்கும் நிலைக்கு வந்து விட்டது.

சென்னையில் ஐடி நிறுவனங் களும், ஐடி ஊழியர்கள் அதிகளவில் குடியிருக்கும் தரமணி, துரைப்பாக்கம், வேளச்சேரி மற்றும் சோழிங்க நல்லூர் உள்ளிட்ட 

பகுதிகளில் கஞ்சா தேவைப் படுபவர் களுக்கு பொட்டலம் போட்டு தேடிச் சென்று கொடுத்து வருகிறது ஒரு கும்பல்.

இந்த தகவல் போலீசாருக்கு கசிந்து கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க களமிறங்கினர். 

ஒரு வழியாக கஞ்சா கும்பலின் செல்போன் எண்ணை கண்டு பிடித்து தொடர்பு கொண்ட தனிப்படை போலீசார், காஞ்சா தேவையென வாடிக்கை யாளர் போல் கேட்க, எதிர் முனையில் தவறான எண்ணிற்கு அழைத்திருப்ப தாக தொடர்பை துண்டித் துள்ளனர்.
கஞ்சா டோர் டெலிவரி


கஞ்சா வேண்டு மென்றால் அதற்கென ஒரு ரகசிய வார்த்தை யொன்றை தெரிவித்தால்

இந்த கும்பல் அவரது முகவரிக்கே சென்று கஞ்சா பொட்டலம் சப்ளை செய்வார்கள் என்ற தகவல் போலீசாருக்கு பின்னர் தான் தெரிய வந்த்து. 

கஞ்சா பயன்படுத்திய வாடிக்கை யாளர் ஒருவர் மூலம் அந்த ரகசிய வார்த்தையை தெரிந்து கொண்ட தனிப்படை போலீசார்,

மீண்டும் தொடர்பு கொண்டு அந்த வார்த்தையை சொன்னதும் எவ்வளவு கஞ்சா தேவையென கேட்டுள்ளனர்.

100 பொட்டலம் என தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் குத்து மதிப்பாக கூற, ஏதாவது பார்டியா என கேட்ட கஞ்சா கும்பல் பதிலை எதிர் பார்க்காமல், 100 பொட்டலத்திற்கு 30 ஆயிரம் என தெரிவித் துள்ளனர்.

மறு முனையில் பேசிய கஞ்சா கும்பலை சேர்ந்த நபர் சொன்னதன் படி கோட்டூர்புரம், மத்திய கைலாஷ் என வரவழைத்து இறுதியாக சோழிங்க நல்லூரில் வந்து பெற்றுக் கொள்ளும் படி கூறி அங்கே வரவழைத் துள்ளார்.
கஞ்சா பொட்டலம்


தனிப்படை போலீசாரில் ஒருவர் அங்கு சென்று பணத்தை கொடுத்து கஞ்சா பொட்டலங் களை பெற்று கொள்ள, சாதாரணை உடையில் பதுங்கி யிருந்த தனிப்படை யினர், கஞ்சா சப்ளை செய்த நபரை பின் தொடர்ந்தனர்.

அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் தரமணி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் செல்ல, அந்த வீட்டிற்குள் அதிரடியாக சென்று பார்த்த போலீசார் உள்ளே 

எடை போடும் எந்திரத்தில் வைத்து கஞ்சா பொட்டலம் போட்டுக் கொண்டிருந்த 3 இளைஞர் களை சுற்றி வளைத்தனர்.

அரவிந்த், கமலக் கண்ணன் மற்றும் லிண்டன் டோனி என சிக்கிய 3 பேரில் அரவிந்த் ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர், 

கமலக் கண்ணன் டைடல் பார்க்கில் பணிபுரியும் ஐடி ஊழியர் என்ற தகவல் தெரிந்து போலீசார் அதிர்ச்சி யடைந்தனர். 

ஐஐடி ஊழியர் அரவிந்த் வீட்டில் வைத்து தான் கஞ்சா பொட்டலம் போட்டு விற்று வந்துள்ளனர்.
டைடல் பார்க் ஊழியர்களுக்கு கஞ்சா


ஐடி ஊழியரான கமலக் கண்ணன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஐடி ஊழியர் பலருக்கும் சப்ளை செய்து வந்துள்ளனர்.

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்க்கும் லிண்டன் டோனி தான் கஞ்சா டோர் டெலிவரி பாய்.

ஒரு ரகசிய வார்த்தையை உருவாக்கி கமலக் கண்ணனுக்கு தெரிந்த ஐடி துறையில் உள்ள வாடிக்கை யாளர்களுக்கு தெரிவிக்க,

அவர்கள் மூலம் கஞ்சா தேவைப்படும் வாடிக்கை யாளர்களுக்கு அந்த ரகசிய வார்த்தை தெரிவிக்கப் படுகிறது.

இந்த கும்பல் சென்னை முழுவதும் வார இறுதி நாட்களில் நடக்கும் பார்ட்டி களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கும் சப்ளை செய்து வந்துள்ளனர். 

சிக்கிய 3 பேரை போன்ற பெரிய கும்பல் பின்னணியில் செயல் படுகிறது என சந்தேகிக்கும் போலீசார் அது குறித்து தீவிர விசாரணையில் இறங்கி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)