தன் குடும்பத்தை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி கேட்ட சிறுவன் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

தன் குடும்பத்தை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி கேட்ட சிறுவன் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற் காக பவிஸ்ப் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை ஒரு காட்டு பகுதியில் ஆயுதம் ஏந்திய போதைப் பொருள் கும்பல் வழிமறித்து கண் மூடித்தனமாக துப்பாக்கி யால் சுட்டது.
23 கி.மீ நடந்தே சென்ற சிறுவன்


இதில் 3 கார்களிலும் தீப்பிடித்து 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கடத்தல் கும்பல் தங்கள் எதிரிகளை தாக்குவதாக நினைத்து தவறான தாக்குதலை நடத்தி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், போதைப் பொருள் கும்பலின் தாக்குதலில் உயிர் தப்பிய 13 வயது சிறுவன், 23 கிலோ மீட்டர் நடந்தே சென்று தனது குடும்பத் தினரை காப்பாற்ற உதவி கோரிய உருக்கமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

தாக்குதலின் போது அந்த 13 வயது சிறுவன், 7 மாத குழந்தை உள்பட தனது உறவுக்கார சிறுவர்கள் 7 பேரை காப்பாற்றி அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். 

தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து சென்றதும் உறவுக்கார சிறுவர் களை புதரிலேயே இருக்க சொல்லி விட்டு, காட்டுப் பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு 6 மணி நேரத்தில் 23 கி.மீ. நடந்தே சென்று உதவி கோரினான். 

அதன் பின்னரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாய மடைந்த குழந்தை களை மீட்டனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close