நயாகராவில் 100 ஆண்டுக்கு முன் மூழ்கிய படகு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

நயாகராவில் 100 ஆண்டுக்கு முன் மூழ்கிய படகு !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்று கொண்டிருந்த இழுவை படகு பாறைகளுக்கு இடையே சிக்கியது. படகில் 2 பேர் இருந்தனர்.
நயாகராவில் மூழ்கிய படகு


அவர்களுடன் அந்த படகையும் மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்க வில்லை. இறுதியில் அந்த படகை அங்கேயே விட்டு விட்டு கயிற்றின் உதவியால் இருவரையும் கரை யேற்றினர். 

அதன் பிறகு அந்த படகு 150 அடி ஆழத்தில் மூழ்கியது.

பிரமாண்ட நீர்வீழ்ச்சி யான நயாகராவின் நீரோட்டத்து க்கு அசைந்து கொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு சிக்கி யிருந்தது.


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக பாறைகளு க்கு இடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்தது. 

பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்த படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக் கழிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்து செல்லப்பட்டு அருவியி லிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 

இதற்கிடையே 101 ஆண்டு களுக்கு பிறகு நீருக்கு அடியில் இருந்து வெளியே வந்த படகினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close