1330 திருக்குறளையும் எழுதச் சொன்ன ஆய்வாளர் - மோதலில் மாணவர்கள் !

0
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பு மாணவர் களையும், 1330 திருக்குறளை எழுதச் சொல்லி பாளையங் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் உத்தர விட்டார். நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டை முருகன் குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. 
1330 திருக்குறள்


இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் ஒரு மாணவருக்கு பிறந்த நாள் விழா என்பதால் பாளையங் கோட்டை வ.உ.சி மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த பாளையங் கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவர் களுக்கும் இவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர் குழுக்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கையில் பயங்கர ஆயுதங் களுடன், மற்றொரு தரப்பு மாணவர்களை தாக்க சென்றுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் பாளையங் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணை யில் நடந்த சம்பவங்களை மாணவர்கள் கூறினர்.
பாளையங்கோட்டையில்


இதன் பிறகு இரண்டு தரப்பையும் சேர்ந்த சுமார் 49 மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர்கள் இருவரையும்

சமாதானப் படுத்தினர். பின்னர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற் காக,

ஒவ்வொரு மாணவர்களும் 1330 திருக்குறளை எழுதி தரும்படி பாளையங் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் தெரிவித்தார். 

ஆனாலும் மாணவர்கள் நேற்று 1330 திருக்குறளை எழுதித் வரவில்லை. இந்நிலையில் 1330 திருக்குறளை எழுதி கொடுத்தால் மட்டும் தான் பள்ளிக்கு அனுப்புவேன். 

இல்லை யென்றால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என பாளையங் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் தெரிவித்தார். 

இதன் பிறகு காவல் நிலையத்திற்கு முன்பே 49 மாணவர்களும் அமர்ந்து 1330 திருக்குறளை பார்த்து எழுதினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)