சீன தேசிய தினத்தில் பெரும் வன்முறை !

0
சீனாவில் மாசேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்டு புரட்சியின் முடிவில் சீன மக்கள் குடியரசு தோற்று விக்கப்பட்டதன் 70-ம் ஆண்டு சீனாவின் தேசிய தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப் பட்டது. 
சீன தேசிய தினத்தில் பெரும் வன்முறை !
சீன தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் பட்டு வந்தாலும், இது 70-வது என்பதால் மிகவும் பிரமாண்ட மான விழாவாக கொண்டாட திட்டமிடப் பட்டது. 

இதற்காக கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பெருமளவு கொண்டாட்டங் களுக்கு திட்டமிடப்பட்டன. 

அதன்படி தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் தேசிய தின கொண்டா ட்டங்கள் விமரிசையாக நடந்தன. இதனை நேரில் காண, சுமார் ஒரு லட்சம் மக்கள் சீனக் கொடிகளுடன் திரண்டிருந்தனர்.  

விழாவில் சீன புரட்சியின் போது, உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. அதன் பின்னர் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கிலும் சீன தேசிய தினம் கொண்டாடப்பட்டது. 

ஹாங்காங்கை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் சீன தேசிய தினத்தின் போது சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் ஹாங்காங்கில் ஏற்கனவே கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், 

சீன தேசிய தினத்தை துக்க நாளாக கடைபிடித்து எதிர்ப்பு பேரணியை நடத்த ஜனநாயக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். 

அசம்பாவிதங் களை தவிர்க்க ஹாங்காங் முழுவதும் ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டன.

எனினும் திட்டமிட்டப்படி ஹாங்காங்கின் மத்திய நகரம் மற்றும் 6 மாவட்டங் களில் ஆயிரக் கணக்கான மக்கள் கருப்பு உடைகளை அணிந்து, வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

ஒருசில இடங்களில் போராட்டக் காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. 

போராட்டக் காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் தோட்டாக் களை பயன்படுத்தி சுட்டனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக் காரர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். மேலும் அவர்கள் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து போலீசார் தடுப்பு களுக்கு தீவைத்தனர்.
இதை யடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர் ஒருவரின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு துளைத்த தாகவும் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே இது குறித்த தகவல் ஹாங்காங் முழுவதும் பரவியதை யடுத்து, போராட்டக் காரர்கள் போலீசாருக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார் மீது கற்களையும், பெட்ரோல் குண்டு களையும் வீசி எறிந்த போராட்டக் காரர்கள் போலீஸ் வாகனங் களுக்கு தீ வைத்தனர். இதனால் ஹாங்காங் முழுவதும் கலவர பூமியாக காட்சி அளித்தது. 

போலீசார் மற்றும் போராட்டக் காரர்கள் இடையிலான வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். 

அவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது.
இதற்கிடையே சீன தேசிய தினத்தை யொட்டி மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் ஜின்பிங், “ஹாங்காங்கில் ஒரு நாடு இரு அமைப்பு தொடரும்” என கூறினார். 
இது பற்றி அவர் பேசுகையில், இந்த மாபெரும் தேசத்தின் அஸ்திவாரத்தை அசைக்கக் கூடிய எந்த சக்தியும் இல்லை. 

எந்தவொரு சக்தியும் சீன மக்களையும், சீன தேசத்தையும் முன்னேறுவதைத் தடுக்க முடியாது. ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டை சீனா கடைப்பிடித்து, 

ஹாங்காங் மற்றும் மகாவ்வின் நீண்டகால செழுமை மற்றும் அமைதியை நிலை நிறுத்தி நிலையான வளர்ச்சியை அடையும்” என கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)