தேவையில்லாமல் பிளேட்லெட் ஏற்றினால் ஆபத்தாகி விடும் - எச்சரிக்கை ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

தேவையில்லாமல் பிளேட்லெட் ஏற்றினால் ஆபத்தாகி விடும் - எச்சரிக்கை !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
தேவை யில்லாமல் பிளேட்லெட் (இரத்த அணுக்கள்) ஏற்றினால், டெங்கு நோயாளி களுக்கு அதுவே ஆபத்தாகி விடும். இரத்தத்தில் நச்சுத் தன்மை ஏற்படுதுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
தேவையில்லாமல் பிளேட்லெட்


மழை சீசன் வந்தவுடன் டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் நோய்களும் அழையா விருந்தாளி யாக வந்து விடுகின்றன. இந்த சீசனில் இதுவரை தலைநகர் டெல்லியில் டெங்குவுக்கு சுமார் 19 பேர் உயிர் இழந்துள்ளனர். 

மேலும், டெங்கு நோய்க்கு 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். டெங்கு நோயாளி களுக்கு பொதுவாக பிளேட்லெட் குறையும். இதனை நிரப்ப வில்லை என்றால் உயிர் இழப்பு ஏற்படும். 

இதனால், டெங்கு நோய் வந்த உடனேயே பிளேட்லெட் உடம்பில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்து கிடக்கிறது.

ஆனால் தேவை யில்லாமல் பிளேட்லெட் ஏற்றினாலும் அதுவே நோயாளி களுக்கு ஆபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சிரிக்கை மணி அடித்துள்ளனர்.

ஹார்ட் கேர் பவுண்டேஷன் ஆப் இந்தியா, ஐஎம்ஏ இணைந்து வலைதளத்தில் பிளேட்லெட் ஏற்றுவது குறித்த கருத்து நிகழ்ச்சி நடத்தின. மிஷன் ஜன் ஜக்குருதி பிளட் பேங்க் மருத்துவ இயக்குனர் டாக்டர் என் கே பாட்டியா கூறியதாவது: 


தேவை யில்லாமல் பிளேட்லெட் ஏற்றினாலும் அதுவே நோயாளி களுக்கு ஆபத்தாக மாறி விடும். இரத்தத்தில் முக்கிய பகுதி பிளேலெட். சாதரணமாக மனித உடம்பில் 1.5 முதல் 4.5 லட்சம் பிளேட்லெட்டுகள் இருக்கும். 

டெங்குவால் இது பாதிக்கப் படுகிறது. டெங்கு நோயாளிகள் அனைவரும் பிளேட்லெட் ஏற்றி கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோயாளி களின் உடம்பில் பிளேட்லெட் எண்ணிக்கை 10,000க்கும் குறைந்தால் மட்டுமே ஏற்ற வேண்டும்.

பிளேட்லெட் எண்ணிக்கை 20,000க்கு கீழ் குறையும் போது நோயாளி களுக்கு இரத்தப் போக்கு ஏற்படும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் மட்டுமே கட்டாயம் பிளேட்லெட் ஏற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

டாக்டர் கே கே அகர்வால் பேசுகையில் கூறியதாவது: 
இரத்த அணுக்கள்
டெங்கு நோய்க்கு பிளேட்லெட் ஏற்றி கொள்வது மட்டும் தீர்வு அல்ல. பெரும்பாலான டெங்கு நோயாளி களுக்கு இது தேவைப் படாது. இந்த விஷயம் மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம். 

டெங்கு நோய் தடுக்கக் கூடிய, சமாளிக்க கூடிய நோய் என்ற விஷயம் பெரும் பான்மையான மக்களுக்கு தெரிய வில்லை. அனைத்து டெங்கு நோயாளி களுக்கும் பிளேலெட் ஏற்ற வேண்டும் என்பது எல்லாம் கட்டுக் கதை. 


அனைத்து டெங்கு இறப்புகளையும் தவிர்க்க முடியும். டெங்கு நோய்களில் ஒரு சதவீதத்து க்கும் குறைவாகவே ஆபத்து என அறிவிக்கப் படுகிறது. 

இரத்தத்தில் பிளேலெட் அளவு நிர்ண யிக்கப்பட்ட அளவுக்கு அல்லது அதற்கு மேல் இருந்தால் சில டெங்கு நோய்களுக்கு பிளேலெட் ஏற்ற வேண்டிய அவசியல் இல்லை 

அல்லது ஒத்தி வைக்கலாம் என்பது அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close