சிறுமியை கொன்ற சித்தி கைது ! Sithi killing girl

0
கணவரின் முதல் மனைவியின் மகளை, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த சித்தியை, சேலையூர் போலீசார், நேற்று கைது செய்தனர்.
சிறுமியை கொன்ற சித்தி


சென்னை, குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், சக்கரபாணி தெரு விரிவில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், பார்த்திபன், 36; மென்பொருள் நிறுவன ஊழியர். 

இவரது மகள் ராகவி, 6; தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.பார்த்திபனின் முதல் மனைவி சரண்யா, 2014ல் உடல் நலக்குறைவால் இறந்தார். 

இதை யடுத்து, 2016ல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்துக் கோட்டையைச் சேர்ந்த சூர்யகலா, 33, என்பவரை, அவர் இரண்டாவதாக திருமணம் செய்தார்.

திருமண மானது முதல், சிறுமி ராகவியை, சூர்யகலா ஒதுக்கி வந்தார். இதனால், கணவன்- மனைவி இடையே, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், ராகவியை வளர்க்க, சூர்யகலா மறுத்ததால், பார்த்திபன் விவாகரத்து வழங்க முடிவு செய்தார். பின், இரு வீட்டாரும் பேசி, சமாதானம் செய்தனர்.

அப்போது, ராகவியை, தன் மகள் போல் பார்த்துக் கொள்வதாக கூறி, சூர்யகலா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதற்கிடையே, ஓராண்டிற்கு முன், சூர்யகலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

அப்போது முதல், சூர்யகலா, மீண்டும் ராகவியை ஒதுக்கி உள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, பார்த்திபனை தொலைபேசி யில் தொடர்பு கொண்ட சூர்யகலா, 'நீண்ட நேரமாக ராகவியை காணவில்லை' எனக் கூறினார்.
வீட்டிற்கு வந்த பார்த்திபன், வீட்டிலும், அருகில் உள்ள பூங்கா மற்றும் மாடியிலும் தேடினார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள, மைதானத்தின் புதர் மண்டிய பகுதியில், ராகவி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவரை மீட்ட பார்த்திபன், குரோம் பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு, ராகவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.

சேலையூர் போலீசார், சந்தேக மரணம் என, வழக்குப் பதிந்து -விசாரித்தனர். சூர்யகலா மீது சந்தேகம் இருப்பதாக, பார்த்திபனின் முதல் மனைவி சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர். 


போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். இதில், அவர் சிறுமியை மாடிக்கு விளையாட அழைத்துச் சென்று, அங்கிருந்து தள்ளி விட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 

இதை யடுத்து, சூர்யகலாவை போலீசார் கைது செய்தனர்.இரண்டு ஆண்டு களுக்கு முன், பார்த்திபன் - சூர்யகலா இருவரும் விவாகரத்து பெற, முடிவு செய்த போது, பார்த்திபனுக்கு தெரியாமல், எங்கள் வீட்டிற்கு, சூர்யகலா, அவரது பெற்றோர் வந்தனர். 
'சரண்யா உடல் நலமின்றி இறந்தாரா; பார்த்திபனும் அவரது குடும்பத்தி னரும் சேர்ந்து, கொலை செய்தனரா?' எனக் கேட்டனர்.

நாங்கள், 'உடல் நலமின்றி தான் இறந்தார்' எனக் கூறினோம். அப்போதே, ராகவியை வளர்க்க விருப்பமில்லை எனக் கூறியிருந்தால், நாங்களே வளர்த்தி ருப்போம். இப்படி அநியாயமாக கொன்று விட்டார். சந்துரு, சிறுமியின் உறவினர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)