ஆர்பிட்டர் மேலும் 7½ ஆண்டுகள் நிலவை சுற்றி வரும் - சிவன் !

0
“சந்திரயான்-2 விண்கல திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக் கிறது. அதன் ஆர்பிட்டர் ஓராண்டுக்கு செயல்பட திட்ட மிட்டிருந்தாலும் மேலும் 7½ ஆண்டுகள் நிலவை சுற்றி வர வாய்ப்பு உள்ளது” என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
ஆர்பிட்டர் 7½ ஆண்டுகள் சுற்றி வரும்




உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 7-ந் தேதியன்று திட்ட மிட்டபடி நிலவின் தென்துருவ பகுதியில் மெல்ல தரை இறங்க முடியாமல் போய் விட்டது. 
அதன் தகவல் தொடர்பு எதிர்பாராத வகையில் துண்டிக்கப் பட்டது. விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் 14 நாட்கள் என்ற நிலையில், மீண்டும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா ஆகிய வற்றின் விஞ்ஞானிகள் பெரு முயற்சி மேற்கொண்டனர்.

அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் நேற்று முடிந்து விட்டது. 

இந்த நிலையில் ஒடிசா தலைநகர் புவனேசு வரத்தில் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த இஸ்ரோ தலைவர் கே.சிவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.




அப்போது அவர் கூறுகையில், “சந்திரயான்-2 விண்கலம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. 

இப்படி நாங்கள் கூறுவதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில் நுட்பம். தொழில் நுட்பத்தை காட்டுவதில், வெற்றி சதவீதம் கிட்டத்தட்ட முழுமையானது” என குறிப்பிட்டார்.
எதிர் கால திட்டம் பற்றி கே.சிவன் குறிப்பிடுகை யில், “எதிர்கால திட்டம் பற்றி விவாதிக்கப் பட்டு வருகிறது. எதுவும் இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. 

அடுத்த ஆண்டு விண்வெளிக்கு ஆளில்லா திட்டம் ஒன்றை நிறைவேற்று வதில் முன்னுரிமை அளிக்கிறோம். முதலில், விக்ரம் லேண்டருக்கு சரியாக என்ன நேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய திருக்கிறது” என்றார்.

“விக்ரம் லேண்டரை பொறுத்த மட்டில், தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டதின் காரணம் என்னவாக இருக்கும் என்பதை தேசிய அளவில் கல்வியாளர் களையும், இஸ்ரோ வல்லுனர் களையும் கொண்ட குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.

விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்த முடிய வில்லை என ஒப்புக் கொண்ட சிவன், “ஏதேனும் தரவுகள் கிடைத்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் பற்றியும் அவர் குறிப்பிட தவறவில்லை. 




இது பற்றி அவர் கூறும் போது, “ஆரம்பத்தில் ஆர்பிட்டர் ஓராண்டு க்குத் தான் நிலவை சுற்றி வர திட்ட மிட்டிருந்தோம். அது மேலும் 7½ ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்ற தகவலை வெளி யிட்டார்.
மேலும், “முழு திருப்தியை தருகிற வகையில் ஆர்பிட்டர் தொடர்ந்து அறிவியல் சோதனைகளை செய்து வருகிறது. 

ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளன. எதற்காக வடிவமைக்கப் பட்டிருந்த னவோ, அந்த நோக்கங் களை அவை சரியாக செய்து வருகின்றன” எனவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)