பொது மக்களை விட துப்பாக்கியே அதிகம் - துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016
பொது மக்களை விட துப்பாக்கியே அதிகம் - துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இல்லாததால், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் வேரூன்றி போய், அசைக்க முடியாதபடி உள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள்துப்பாக்கி பிரியர்களின் அழுத்தத்தால், துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களை சீரமைத்து, விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறுகிறது. இதனால் செப்டம்பர் 2019 வரை 10,173 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அரசு இதை சீர்செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இறந்தவர் களுக்கு அனுதாபம் மட்டும் தெரிவித்தது. 

ஆண்டுக்கு ஆண்டு, துப்பாக்கி தொடர்பான வன்முறையில் பலியாகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், துப்பாக்கி வைத்திருக்கும் கலாசாரம் பற்றி அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக விவாதம் நடந்து வருகிறது.

ஆகஸ்டு 3-ந்தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் எல் பெசோவில், கூட்டம் நிறைந்த ஒரு வால்மார்ட் அங்காடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 22 பேர் கொல்லப் பட்டனர். 

துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல் துறையினரிடம் சரண் அடைந்த பின், மெக்சிகோவில் இருந்து குடியேறியவர் களை குறி வைத்து தாக்கியதாக கூறியுள்ளார். 
அதற்கு 24 மணி நேரத்திற்குள், ஒகியோ மாகாணத்தின் டெயட்டனில் ஒரு நெரிசல் மிகுந்த தெருவில் ஒரு நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவரின் சகோதரி உள்பட 9 பேர் பலியானார்கள். 

ஆகஸ்டு 31 அன்று, வேலை இழந்த நபர் டெக்சாஸ் நெடுஞ் சாலையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப் பட்டனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி உரிமை

அமெரிக்காவில், குடிமக்களிடம் உள்ள சட்டப்பூர்வமான துப்பாக்கிகள் மற்றும் சட்ட விரோதமான துப்பாக்கிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 39.3 கோடியாக இருப்பதாக, 2018-ல் நடத்தப்பட்ட சிறு துப்பாக்கிகள் பற்றிய ஆய்வு கணிக்கிறது. 

பொது மக்கள் 100 பேருக்கு 120.5 துப்பாக்கிகள் உள்ளன. பொது மக்களின் எண்ணிக்கையை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி களை வைத்திருக்கும் உரிமையை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. 
பொது மக்களை விட துப்பாக்கியே அதிகம்
‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட குடிமக்கள் படை தேவை என்பதால், பொது மக்கள் ஆயுதங்களை வைத்திருக்கும் உரிமை நசுக்கப் படாது’ என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் இரண்டாவது திருத்தம் சொல்கிறது. 

துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம், 1986 போன்ற சட்டங்கள், மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், 18 வயதிற்கும் குறை வானவர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆகியோர் துப்பாக்கி வாங்குவதை தடை செய்கிறது.

1994 முதல் 2004 வரை தாக்குதல் துப்பாக்கிகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. ஆனால் பின்னர் இந்த சட்டம் காலாவதியாக அனுமதிக்கப் பட்டது. 

2017-ல் லாஸ் வேகாசில் ஒரு துப்பாக்கி ஏந்திய மனிதன், அரை தானியங்கி துப்பாக்கியை எந்திர துப்பாக்கி போல் உபயோகிக்க ‘கன் ஸ்டாக்’ என்ற உபகரணத்தை பயன்படுத்தி, 58 பேரை சுட்டுக் கொன்ற பின், இந்த உபகரணம் தடை செய்யப் பட்டது. 
துப்பாக்கி வாங்கும் நபர் பற்றிய பின்புல ஆய்வுகள் சட்டப்படி தேவை என்றாலும், தனிப்பட்ட விற்பனை, துப்பாக்கி கண்காட்சிகள் மற்றும் அனுமதி பெறாத ஆன்லைன் விற்பனைக்கு இது பொருந்தாது. 

சென்ற ஆகஸ்டில் 7 பேரை சுட்டுக் கொன்ற டெக்சாஸ் நபர், பின்புல சோதனைகளில் தோல்வி யடைந்தவர் தான். ஆனால் ஒரு தாக்குதல் துப்பாக்கியை தனி நபரிடம் இருந்து வாங்கியவர்.

அமெரிக்க மாகாணங் களிடையே துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் மாறு படுகின்றன. உதாரணமாக, கலிபோர்னியா மாகாணத்தில், கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் உள்ளன. 

சில வகையான அரை தானியங்கி துப்பாக்கிகளை, ‘தாக்குதல் துப்பாக்கிகள்’ என்று வகைப் படுத்தி, அவற்றின் விற்பனை மற்றும் உரிமை தடை செய்யப் பட்டுள்ளது. 

அண்டை மாகாணமான நெவெடாவில் இது தடை செய்யப்பட வில்லை என்பதால் அங்கே இதை வாங்கிய நபர், ஜூலை மாதத்தில் கலிபோர்னியா விற்கு இதை எடுத்துச் சென்று 3 பேரை கொல்ல பயன் படுத்தினார். 

2019 நிலவரப்படி, அமெரிக்காவில், ராணுவ பாணி துப்பாக்கிகள், அரை தானியங்க துப்பாக்கிகள், அதிக ரவைகளை கொண்ட துப்பாக்கி களுக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட வில்லை. 

அரை தானியங்கி துப்பாக்கி என்பது, விசையை அழுத்தியதும் ஒரு ரவையை சுட்டு வெளியேற்றி, அதன்பிறகு அடுத்த ரவையை தானாகவே சுடுகுழலில் நிரம்பும் தன்மை கொண்டது ஆகும். 

100 ரவைகளை கொண்ட பெரிய துப்பாக்கிகள் மூலம், ரவைகளை இடையில் நிரப்ப தேவை யில்லாமல், தொடர்ந்து சுட முடியும்.

என்.ஆர்.ஏ.வின் பங்களிப்பு

அமெரிக்காவின் மிகப்பெரிய, துப்பாக்கி உரிமைகளுக் கான குழுமமான தேசிய துப்பாக்கி உரிமை யாளர்கள் சங்கம் (என்.ஆர்.ஏ.) துப்பாக்கி கட்டுப்பாடு பற்றிய விவாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

1871-ல் தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் முக்கிய நோக்கம், ‘விஞ்ஞான பூர்வமான முறையில் துப்பாக்கி சுடுதலை ஊக்குவித்தல்’ ஆகும். மிக அதிக எண்ணிக்கை யிலான உறுப்பினர்கள் மற்றும் பெரும் நிதி வசதிகள் கொண்ட இதன் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது.
எல் பாசோ தாக்குதலுக்கு பிறகு, வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டகுலாஸ் மேக்மில்லொன், வால்மார்ட்டின் துப்பாக்கி விற்பனை கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தார். 

கையிருப்பில் உள்ள சரக்குகள் விற்றபின், குறுகிய நீள சுடுகுழாய் துப்பாக்கி களுக்கான, உதாரணமாக .223 மற்றும் 5.56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கி ரவைகளின் விற்பனை நிறுத்தப்படும் என்று அறிவித்தார். அலாஸ்கா மாகாணத்தில் கைத்துப்பாக்கி விற்பனையை முற்றிலும் நிறுத்தியது வால்மார்ட். கைத்துப்பாக்கிகள் விற்பனையில் இருந்து முழுமையாக வெளியேறியது. 

ஆனால் தேசிய துப்பாக்கி உரிமை யாளர்கள் சங்கம் இந்த முடிவை வெட்கப்பட வேண்டிய ஒன்று என்றது. சமீபத்தில் அது வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றவாளி மீது பழியை சுமத்தாமல், சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களை வால்மார்ட் தண்டிக்கிறது. 

குற்றங்கள், வன்முறை, மனநலம் போன்ற பிரச்சினைகளை, நமது தலைவர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப் புடனும் அணுக வேண்டும்’ என்று கூறியுள்ளது.

செப்டம்பரில், சான் பிரான்சிஸ்கோ அரசு, என்.ஆர்.ஏ. அமைப்பை ஒரு ‘உள்நாட்டு பயங்கரவாத அமைப்பு’ என்று முத்திரை குத்தியது. 

அதன் தீர்மானத்தில், ‘தேசிய துப்பாக்கி உரிமை யாளர்கள் சங்கம், அதன் பெரும் நிதி ஆதாரங்கள் மற்றும் நிறுவன வலிமையை கொண்டு துப்பாக்கி வாங்கவும், 

துப்பாக்கி வைத்திருப் பவர்களை வன்முறையில் ஈடுபடவும் தூண்டுகிறது’ என்று கூறியுள்ளது. ‘அனைத்து நாடுகளிலும் வன்முறையில் ஈடுபடும், வெறுக்கத்தக்க மனிதர்கள் உள்ளனர். 

ஆனால் அமெரிக்காவில் மட்டும் நாம் அத்தகைய வர்களுக்கு பெரிய எண்ணிக்கை யிலான ரவைகளை கொண்ட தாக்குதல் ஆயுதங்கள் கிடைக்க வகை செய்கிறோம். இதில் தேசிய துப்பாக்கி உரிமை யாளர்கள் சங்கம் பெரும் பங்கு வகிக்கிறது’ என்று கூறுகிறது.
இன்றைய நிலவரம், துப்பாக்கி கட்டுப்பாட்டு ஆர்வலர்களுக்கு சாதகமாக உள்ளது. என்.ஆர்.ஏ. அமைப்புக்கு எதிராக பல வழக்குகள் நடந்து வருகின்றன. 

நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள தாக அதன் குற்றம் சாட்டப்பட்டு, அதை பற்றி விசாரணை நடைபெறுகிறது. இது நிரூபிக்கப் பட்டால், லாப நோக்கமற்ற அமைப்பு என்ற அந்தஸ்தை அது இழக்க வேண்டி யிருக்கும்.

துப்பாக்கி கட்டுப்பாடு பற்றிய விவாதம்

குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் பல சம்பவங்களில் சுடப்பட்டுள்ள தால், தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையின் அவசியம் பற்றி பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. 

அல்லது மேலும் கடுமையான கட்டுப்பாட்டு சட்டங்கள் தேவையா என்பதும் விவாதிக்கப் படுகிறது.

அமெரிக்காவில் 67 சதவீத துப்பாக்கி உரிமை யாளர்கள் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துள்ள தாக கூறுவதாகவும், 57 சதவீதத்தினர் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் மேலும் கடுமை யாக்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும், பியு ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 

ஆனால் துப்பாக்கி வாங்கும் முறையை கடினமாக்குவது, பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடப்பதை தடுக்குமா என்பதில் இவர்களிடையே முரண்பாடு உள்ளது.
சட்டப்படி துப்பாக்கி வாங்கும் முறையை கடினமாக்குவது, பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடப்பதை தடுக்கும் என்று வயது வந்த அமெரிக்கர் களில் 47 சதவீதத்தினர் கூறுகின்றனர். 46 சதவீதத்தினர் இதனால் எந்த மாறுதலும் ஏற்படாது என்கின்றனர். 

மனநோய் பாதிப்புக் குள்ளானவர் களுக்கு துப்பாக்கி விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியினர் ஏற்கின்றனர். 

விமான பயணம் செய்ய தடை விதிக்கப் பட்டவர்கள் மற்றும் அரசின் கண்காணிப்பில் உள்ளவர்கள், துப்பாக்கி வாங்குவது தடை செய்யப்பட வேண்டும். 

தனிநபர் மூலம் நடைபெறும் விற்பனை, துப்பாக்கி கண்காட்சி களில் நடைபெறும் விற்பனைகளில், வாங்குபவர்களின் பின்புலம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதையும் ஏற்கின்றனர்.
பள்ளிகளுக்கு செல்லும் போது துப்பாக்கி எடுத்துச் செல்ல, ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும், பொது இடங்களில் மக்கள் துப்பாக்கி களை ஆடையில் மறைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதையும், குடியரசு கட்சியினர் அதிகம் ஆதரிக்கின்றனர். 

தாக்குதல் ரக துப்பாக்கிகள் மற்றும் அதிக எண்ணிக்கை யிலான ரவைகள் கொண்ட துப்பாக்கிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவ ர்களில் பெரும் பாலானவர்கள், கடந்த 5 வருடங்களில் பெரும் மன அழுத்தம் தரும் நிகழ்விற்கு உள்ளானவர்கள். 

அவர்களின் பாதி பேர்களுக்கு மேல், இந்த கால கட்டத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள தாக, ‘பொது வெளிகளில் நடந்த பெரும் தாக்குதல்கள்’ என்ற தலைப்பில் அமெரிக்க ரகசிய காவல் துறையின், தேசிய பாதுகாப்புக் கான அச்சுறுத்தல்கள் பற்றிய மதிப்பீடு மையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. 

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்களில் 3-ல், 2 பங்கினருக்கு மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள். மன சோர்வு, தற்கொலை எண்ணம் போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. 

அவர்களில் பாதி பேருக்கு குடும்பம் அல்லது பணியிட சிக்கல்கள் அல்லது சொந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது. 

துப்பாக்கி சூட்டில் யார் ஈடுபடுவார்கள் என்று கண்டறிவது மிகவும் கடினமானது, அத்தகையவர்கள் பற்றிய பொதுப்பிம்பம் எதுவும் இருக்க முடியாது என்பது இந்த எண்ணிக்கைகள் மூலம் தெளிவாகிறது.

டிரம்ப் முன் வைக்கும் தீர்வு என்ன?

ஆகஸ்டில் எல் பேசோ மற்றும் டெயட்டனில் நடந்த துப்பாக்கி சூடுகளுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “மனநோய் தான் துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், துப்பாக்கிகள் அல்ல” என்று கூறியுள்ளார். துப்பாக்கி சூடுகளை தடுக்க ஒரு 5 அம்ச திட்டத்தையும் அவர் முன்வைத்தார்.

1. நீதித்துறையும், உள்ளூர், மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகளும், சமூக ஊடக நிறுவனங்களும் இணைந்து, பொது மக்களை சுடும் தன்மை கொண்டவர் களை முன்கூட்டியே கண்டறிய தேவையாக கருவிகளை உருவாக்க வேண்டும்.

2. வன்முறையை போற்றத்தக்க விஷயமாக முன்னிறுத்தும் வீடியோ கேம்ஸ்களில் இருக்கும் வன்முறை காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.

3. மனநல சட்டங்களை சீர்திருத்தி, அதன் மூலம், வன்முறையில் ஈடுபடக்கூடிய மனநலம் பாதிப்புக் குள்ளானவர் களை எளிதாக கண்டறிய வகை செய்ய வேண்டும். 
அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்கவும், தேவைப் பட்டால் காப்பகங்களில் அடைக்கவும் வகை செய்ய வேண்டும்.

4. பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்களுக்கு துப்பாக்கிகள் கிடைப்பதை தடுக்கவும், அவர்களிடம் உள்ள துப்பாக்கி களை காவல் துறையினர் பறிமுதல் செய்யவும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

5. துப்பாக்கி சூடு நடத்துபவர் களுக்கு விரைவாக மரண தண்டனை அளிக்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் ராணுவ பாணி தாக்குதல் துப்பாக்கிகள், அரை தானியங்கி துப்பாக்கிகள், பெரிய அளவு எண்ணிக்கையில் ரவை கொண்ட துப்பாக்கி களை அனைத்து மாநிலங்களிலும், முற்றிலும் தடை செய்யும் திட்டம் எதுவும் இதில் இல்லை. 
துப்பாக்கி வாங்குப வர்களின் பின்புலம் பற்றி, குறைகளே இல்லாத முறையில் ஆய்வு செய்தல், தனி நபர்களிடம் இருந்தும், துப்பாக்கி கண் காட்சிகளிலும் வாங்குவதை முற்றிலும் தடை செய்வது பற்றியும் எதுவும் சொல்லப்பட வில்லை.

இந்திய தொடர்பு

கடந்த சில வருடங்களில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடுகளில் பல இந்தியர்கள் பலியாகி யுள்ளனர். இவர்களில் பலரும் அமெரிக்காவில் மேற் படிப்புக்காக சென்ற மாணவர்கள்.

2017-ல் 26 வயதான வம்சி ரெட்டி மமிடாலா என்ற மாணவர் கலிபோர்னியா வில் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரை சுட்டுக் கொன்ற ஸ்டுவார்ட் பாரனெக் என்பவர் போதை மருந்துக்கு அடிமையானவர். 

சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப் பட்டவர். பின்னர் அவர் கைது செய்யப் பட்டார். 

2017-ல் கன்சாசிஸில், இந்திய மென்பொருள் ஊழியரான, 32 வயதுடைய ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவை, ஆடம் புரிண்டன் என்ற அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர் சுட்டுக் கொன்றார். அவருக்கு பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. 

2018-ல், கன்சாசிஸில், 25 வயதான இந்திய மாணவர் சரத் கோப்புலா சுட்டுக் கொல்லப் பட்டார். ஸ்ரீநிவாஸ் ஒரு வெறுப்பு குற்றத்தில் பலியானார். ஆனால் மற்ற இருவரும் துப்பாக்கி சூட்டின் இடையே சிக்கி பலியானார்கள்.
பொது மக்களை விட துப்பாக்கியே அதிகம் - துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள் ! பொது மக்களை விட துப்பாக்கியே அதிகம்  - துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் இந்தியர்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 9/27/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚