ATM மூலம் மக்களுக்கு பால் விநியோகம் !

0
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கொளகம் பட்டியை சேர்ந்தவர் விவசாய பட்டதாரி முருகன் இவர் பால் வியாபாரம் செய்து வந்த நிலையில் பொதுமக்களுக்கு தரமான பாலை எளிய முறையில் எந்நேரமும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. 
ATM மூலம் பால்




இதனால் இதற்கு என்ன வழி என்று இணையத்தில் தேடிய அவருக்கு நல்ல பதிலாக அமைந்தது தான் இந்த பால் ஏடிஎம். இந்த பால் ஏ.டி.எம் மெஷின் ஆனது 300 லிட்டர் கொள்ளளவும் இரண்டு நாள்கள் பதப்படுத்தும் வசதியும் கொண்டது. 

10 ரூபாய் ,50 ரூபாய் , 100 ரூபாய் எனப் பணத்தை நாணய மாகவோ ரூபாய் நோட்டு களாகவோ செலுத்தி அதற்கேற்ற பாலை நுகர்வோர் தாமாகவே பெற்றுக் கொள்ளலாம்.
ஏ.டி.எம் போன்ற அட்டைகளைப் பயன்படுத்தும் வசதியும் உள்ளதால் கிட்டத்தட்ட ஏ.டி.எம் போல தான் இயங்கும். 

இது சிறியவர்களில் இருந்து முதியவர்கள் வரை அனைவரும் சிரமமின்றி பால் வாங்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.




இதனை பற்றி பால் ஏடிஎம் உரிமையாளர் முருகன் கூறியது:-

அரூர் நான்கு வழிச்சாலை அருகே நவீன இயந்திரம் மூலம் கறந்த பாலை எந்தவித மாற்றமும் இன்றி அதே தரத்துடனும் சரியான விலையிலும் வாங்க முடிவதால் வாடிக்கை யாளர்களிடையே பால் ஏடிஎம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த பால் ஏடிஎம்மில் அனைத்து நேரமும் பால் கிடைப்பதால் பொது மக்கள் பெரிதும் இதையே நாடுகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)