இனிமே தப்பு செய்யாதீங்க போலீஸ் உடம்பெல்லாம்.., புதிய டெக்னாலஜி !

0
சென்னை யில் போக்குவரத்து விதி மீறலுக்கான ஆதாரங்களை பதிவு செய்யும் விதத்தில், போக்குவரத்து போலீசாருக்கு உடல் இணை கேமராக்கள், 98 லட்சத்து 6 ஆயிரம் செலவில் நடைமுறைக்கு வந்துள்ளது. 
புதிய டெக்னாலஜி
இது குறித்து ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். 

வாகன தணிக்கை யில் ஈடுபட்ட காவலர் தவறாக பேசியதாக கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். 

அதே போல் மதுர வாயிலிலும் ஒரு கால் டாக்சி ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவங்களில் வாகன தணிக்கையில் ஈட்டுபட்ட காவலர்கள் வாகன ஓட்டுநர்களை தவறாக பேசியது தொடர்பான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. 

ஏனெனில், இருவருக்கும் இடையே நடைபெற்ற விவாதங்கள் குறித்த தகவல்கள் இல்லை. இது போன்ற சம்பவங்கள் அவ்வபோது நிகழ்ந்து வருகின்றன என்பது மறுப்பதற் கில்லை.
மேலும் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்களிடம் வாகன ஓட்டிகள் டிராபிக்கில் தவறாக சென்று விட்டு முறையற்று பேசுவதும், 

விதிகளை மீறி செல்வதும், தவறு செய்ய வில்லை என வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும் பார்க்க முடிகிறது.
இது போன்ற பிரச்சனை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளும், அவர்களை பிடிக்கும் காவலர்களும் என்ன பேசுகின்றனர் என்பதை 

தெளிவாக கேட்பதன் பொருட்டும் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர் களுக்கு உடல் இணைப்பு காமிராக்கள் வழங்கப் பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி முதலமைச்சர் இணைப்பு காமிராக்கள் வழங்கும் துவக்கி வைத்த திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 3-5காமிராக்கள் வழங்கப் பட்டுள்ளன. 

இந்த காமிராக்கள், வாகனங்கள் தணிக்கை செய்யும் ஆரம்பிக்கும் முன்பு இந்த காமிரா இயக்கப்பட்டு பதிவும் செய்யப்படும்.

பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்படும். ஒரு வேளை சர்ச்சையோ அல்லது வாகன ஓட்டிகள் பிரச்சனையோ செய்யும் சூழ்நிலையில் 

அந்த காமிராவில் உள்ள சோர்ஸ் ஆஃப் சீன் எனப்படும் பொத்தானை அமுக்கினால் அதிலிருந்து தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும்.
இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையி லிருந்து காவலர்கள் பிரச்சனைக் குரிய இடத்திற்கு வந்து விடுவர். 

இதன் மூலம் காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆராய்ந்து தவறுகளை ஆராய முடியும். 98லட்சத்து 6ஆயிரம் செலவில் 201 கேமிராக்கள் வழங்கப் பட்டுள்ளன.
இந்த கருவிகளில் உள்ள 2 எம்பி கேமராக்கள் வழியாக காணொலி பதிவுகள், புகைப்படங்கள் ஆகிய வற்றை பதிவு செய்யலாம். 

இந்தப் பதிவுகளில் நிகழ்நேர தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை தானாகவே இடம்பெறும். 
மேலும் கேமராக்களில் பொருத்தப் பட்டிருக்கும் 4ஜி இணைப்பு மூலமாக குறிப்பிட்ட கேமராக்களின் நிழற்பட பதிவுகளை, கட்டுப் பாட்டு அறை மற்றும் உயரதிகாரிகள் நேரலையில் கண்காணிக்க லாம்.

போக்கு வரத்து அதிகாரிகள் எங்கு வழக்குப்பதிவு செய்கிறார்கள் என்பதையும் ஜிபிஎஸ் தொழில் நுட்பம் மூலமாக வரை படத்தில் நேரலையில் கண்காணிக்க லாம். 

இந்த கருவிகளின் துணையோடு, போக்குவரத்து காவல் அதிகாரியின் முன்பு நடைபெறும் போக்குவரத்து 

விதி மீறல்களின் ஆதாரங்கள் நிழற்படம் மற்றும் ஒளி, ஒலியுடன் கூடிய காணொலி யாக பதிவு செய்யப்படும்.
போக்குவரத்து விதி மீறல்களுக்கு வழக்குகள் பதிவு செய்வதில், வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் உறுதி செய்யலாம் என்பதுடன், 
வீண் விவாதங் களையும் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. வளரும் தொழில் நுட்பங்கள் நுட்பமாக தவறுகளை களைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)