பித்தப் பையில் கல் உண்டாக காரணம் என்ன? தெரியுமா?

மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். 
பித்தப் பையில் கல் உண்டாக காரணம் என்ன? தெரியுமா?

இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ் நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களு க்குத் தெரிவ தில்லை.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்த படியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளி விவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.

பித்தநீர்ச் சுரப்பு
பித்தப் பையில் கல் உண்டாக காரணம் என்ன? தெரியுமா?

நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000 -த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை.

97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன. கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன் சிறுகுடலுக்கு வந்து சேரும். 

அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிரு க்கும் (Gall bladder) பித்தப் பையினுள் அது செல்லும். 
அப்போது பித்தப் பையானது பித்தநீரைப் பெற்றுக் கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமான த்துக்குத் தயாராக வைத்திருக்கும்.

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், `பித்த நீர் தேவை’ என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். 

உடனே பித்தப் பையானது, தன்னைத் தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் குழாய்க்குள் அனுப்பி வைக்கும். அது நேராக முன் சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.

பித்தநீர்க் கற்கள்
பித்தப் பையில் கல் உண்டாக காரணம் என்ன? தெரியுமா?

சாதாரண மாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும் தான் கற்கள் உருவாகின்றன. 

ஏன்? பித்தப் பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிக மாக்கும் போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத் தன்மை வாய்ந்தவை. 

அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும். இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். 
இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்று தான் தோற்ற மளிக்கும். மென்மையாக இருக்கும். 

கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களை விட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.

காரணம் என்ன?

1. உடல் பருமன்

2. அசாதாரண மான உணவு வளர்சிதை மாற்றங்கள்.

3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.

4. பரம்பரைக் கோளாறு.

5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.

6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

7. மாவுச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.

9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.

10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப் பையில் அடைப்பு ஏற்படுவது.

11. கருத்தடை மாத்திரை களை நீண்ட காலம் சாப்பிடுவது.

12. அடிக்கடி விரதம் இருப்பது.

13. கர்ப்பம்.

14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.

15. ‘சிக்கில் செல்’ ரத்த சோகை.

பித்தப்பைக் கற்களின் வகைகள்
பித்தப் பையில் கல் உண்டாக காரணம் என்ன? தெரியுமா?

பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப் பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

பித்த நீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். 

இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும்.

அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன. கடைசி வகைக்குக் கலப்படக் கற்கள் என்று பெயர். 

பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே. கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்ற வற்றால் உருவானவை.
இவை எண்ணிக்கை யிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும்.
பித்தப் பையில் கல் உண்டாக காரணம் என்ன? தெரியுமா?

சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன. இங்குக் கற்களின் வகை குறித்துப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. 

குறிப்பிட்ட நபருக்கு எந்த வகை கல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அந்தக் கல்லுக்குரிய வேதிப்பொருட்கள் 

அதிகமுள்ள உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் பித்தப்பைக் கற்களை மீண்டும் வர விடாமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே உள்ள கற்களை,  இன்னும் அதிகம் வளர விடாமலும் தடுத்துக் கொள்ள முடியும்.
Tags: