பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?





பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
மலைப்பிரதேசமான உத்தரகாண்டில் அடிக்கடி பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. 
பேருந்தை யானை காப்பாற்றியதா?
இந்த நிலையில், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை ஒன்று காப்பாற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

மீம்ஸ் வடிவில் பேஸ்புக்கில் பதியப் பட்டுள்ள அந்த புகைப் படத்தில் “பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை சாமர்த்திய மாக நிறுத்தி மக்களின் உயிரைக் காப்பாற்றிய யானை” என குறிப்பிடப் பட்டிருந்தது. 
சோம்பு சேர்த்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?
பேஸ்புக்கில் வைரலான அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது இந்தியாவில் நடக்க வில்லை என்பது கண்டறியப் பட்டுள்ளது.

அந்த புகைப்படம் கடந்த 2007-ம் ஆண்டு வங்க தேசத்தில் எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. 

வங்க தேசத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சிடிர் என்ற புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
வங்க தேசத்தில் எடுக்கப்பட்டது
அப்போது சேற்றில் சிக்கிய பேருந்தை யானை மூலம் மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. இதன் மூலம் இது உத்தர காண்டில் நடக்க வில்லை என்பது உறுதியாகி யுள்ளது.

இது போன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. 
திருமணத்திற்கு பின் ஆண்களின் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள்? 
ஒரு வேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.

போலி செய்திகளால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறி யிருக்கிறது.
சமூக வலைத் தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)