அம்மாடியோ.. புதிய விதி வந்த பின் வசூலான அபராத தொகை இவ்வளவா - கண்ண கட்டுதே !

0
புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு வசூலான அபராத தொகைகள் குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வசூலான அபராத தொகை



இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். இதுதவிர சுமார் 3 லட்சம் பேர் படுகாய மடைகின்றனர். 

எனவே இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்ப வர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற த்தில் கடந்த ஜூலை 31ம் தேதி நிறைவேற்றப் பட்டது. இதற்கு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். 
இதன் பின் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக் கான அபராதம் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. 

இதன்படி மிக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுபவர் களுக்கான அபராதம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்கு பழைய அபராதம் 1,000 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் களுக்கு புதிய விதி முறைகளின் படி இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 
புதிய விதி
ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங் களுக்கு வழி விடாவிட்டாலும் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். இது போல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக் கான அபராத தொகைகளும் மிக கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை க்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு வகையான விமர்சனங்களும் வந்து கொண்டுள்ளன. 

அதிகப் படியான அபராத தொகை களுக்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் இனி போக்குவரத்து விதிமுறை களை முறையாக கடை பிடிப்பார்கள் என்பது ஆதரவு தெரிவிப்ப வர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் இதை காரணம் காட்டி போலீசார் இனி வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள் என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர் களின் கருத்தாக உள்ளது. 

எது எப்படியோ உயர்த்தப்பட்ட அபராத தொகைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது புதிய அபராதங்களை காவல் துறையும், நீதிமன்றங்களும் விதிக்கவும் தொடங்கி விட்டன.
இந்த சூழலில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நான்கு நாட்களில் (செப்டம்பர் 1-4), போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யப்பட்ட அபராத தொகை குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளன. 
அபராத தொகை இவ்வளவா



இதன்படி வெறும் நான்கே நாட்களில் சுமார் 1.41 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப் பட்டுள்ளது. இவ்வளவு தானா? என நினைத்து விடாதீர்கள்.

இது ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும், முதல் நான்கு நாட்களில் வசூலான அபராத தொகை விபரம் மட்டுமே. 

இந்தியா முழுக்க வசூல் செய்யப்பட்ட ஒட்டு  மொத்த அபராத தொகை குறித்த தகவல்கள் எதையும் தற்போது வரை அதிகாரிகள் வெளியிட வில்லை.
ஒடிசா மாநிலத்தில் வசூலான அபராத தொகை குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒடிசாவில் போக்கு வரத்து விதிமுறை மீறல்களுக் காக மொத்தம் 4,080 சலான்கள் வழங்கப் பட்டுள்ளன. 

இதற்கான அபராத தொகையாக மொத்தம் 88.90 லட்ச ரூபாய் வசூல் செய்யப் பட்டுள்ளது. ஒடிசா மோட்டார் வாகன துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது'' என்றார். 

அதே சமயம் ஹரியானாவில் 343 சலான்கள் வழங்கப் பட்டுள்ளதாக வும், இதற்காக 52.32 லட்ச ரூபாய் அபராதமாக வசூலாகி உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 
வசூலான அபராத தொகை
ஆக மொத்தம் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் முதல் நான்கு நாட்களில் 1.41 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டுள்ளது. 

பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம், இன்னும் தமிழகத்தில் முழுமையாக நடைமுறை க்கு வரவில்லை.

இருப்பினும், போக்குவரத்து விதிமுறை களை தாறுமாறாக மீறிய தூத்துக்குடியை சேர்ந்த ஓர் இளைஞருக்கு, தக்க பாடம் புகட்டும் வகையில் புதிய விதிகளின்படி கடுமையான அபராதத் தொகையை நீதிமன்றம் விதித்துள்ளது. 

இது குறித்த சுவாரஷ்ய மான தகவல்களை கீழே பார்க்கலாம்.

தமிழகத்தை பொறுத்த வரை, புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது விதிக்கும் பணிகளை போலீசார் இன்னும் முழு வீச்சில் தொடங்க வில்லை. ஆனால் நீதிமன்றங்கள் அந்த பணியை தொடங்கி விட்டன. 
சண்முக நாதனுக்கு நீதிமன்றம் தான் கடுமையான அபராதத்தை விதித்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்று (செப்டம்பர் 1) சண்முக நாதன் டூவீலரில் ஜாலியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமை யிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். 

சண்முக நாதன் ஹெல்மெட் அணியாமல் ஹாயாக காற்று வாங்கி கொண்டு வந்ததால், போலீசார் அவரை நிறுத்தினர். அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிரு க்கையில், அவர் குடிபோதையில் வேறு இருப்பது தெரிய வந்தது.
மோட்டார் வாகன துறை



இது போதாதென்று அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் வேறு இல்லை. எனவே மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு விதி முறைகளின் கீழ் சண்முகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அத்துடன் அவரது இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப் பட்டது. இதன் பின் கடந்த செவ்வாய் கிழமையன்று (செப்டம்பர் 3) அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய விதி முறைகளின் படி சண்முக நாதனுக்கு அதிரடியாக 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 
குடிபோதை யில் வாகனம் ஓட்டியதற் காக 10 ஆயிரம் ரூபாயும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற் காக 5 ஆயிரம் ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் டூவீலரை ஓட்டியதற் காக ஆயிரம் ரூபாயும் என அவருக்கு மொத்தமாக 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

இது போன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக கடை பிடியுங்கள். 

இல்லா விட்டால் அபராதத்தை செலுத்து வதற்காக நீங்கள் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஏனெனில் அந்த அளவிற்கு அபராதம் மிக கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது.

புதிய போக்குவரத்து விதி சார்ந்து அரங்கேறும் இந்த சம்பவங்கள் நாடு முழுக்க பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வேடிக்கையான மீம்ஸ்களும் உலா வர தொடங்கி யுள்ளன. 
டிரைவிங் லைசென்ஸ்



போக்குவரத்து விதி மீறல்களுக் கான அபராத தொகைகள் உயர்த்தப் பட்டிருப்பதை பலர் வரவேற்று வருகின்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. 

அபராதம் மிகவும் கடுமை யாக உள்ளது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இது சாதாரண வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், 

அபராத தொகைகள் உயர்த்தப் பட்டுள்ளதை காரணமாக வைத்து வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையை தொடங்கி விடுவார்கள் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். 
இதே காரணத்திற் காக 5 மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட அபராத தொகை களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய அந்த ஐந்து மாநிலங்க ளிலும் இன்னும் அபராதம் உயர்த்தப் படவில்லை. ஆனால் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் போலீசாரின் அதிரடி தொடங்கி யுள்ளது. 

இதற்கு தமிழகமும் விதி விலக்கல்ல. இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த சண்முக நாதனுக்கு இத்தகைய கடுமையான அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)