ஹெச்ஐவியால் பாதித்த பெண் மருத்துவமனைக்கு எதிராக போட்ட வழக்கு தள்ளுபடி !

0
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் ரத்தம் ஏற்றியதால் தனக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்ட தாக கூறி, இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது..
கீழ்ப்பாக்கம்



சென்னை மாங்காட்டை சேர்ந்த 28 வயது நிரம்பிய பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தன்னுடைய பிரசவத்திற் காக மாங்காட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப் பட்டேன்.

பின் பரிந்துரையின் பேரில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது ரத்தம் குறைவாக இருந்ததால் ரத்தம் ஏற்றி கொண்டேன்.
பெண்கள் சுடிதாரில் அழகாக தெரிய என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து குழந்தை பெறுவதற்கு முன்னதாக ரத்த பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

ஐகோர்ட்டில் வழக்கு

எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் ரத்தம் ஏற்றிய போது தான் தனக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதற்கு தனக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட் டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு நடைபெற்று வந்தது,

அரசு வழக்கறிஞர்

வழக்கின் போது அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விரிவாக விசாரணை மேற்கொள்ளப் பட்டது.
அன்னாசி அல்வா செய்வது எப்படி?
விசாரணை முடிவில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் ரத்தம் ஏற்றிக் கொண்ட பின்னரே, ஹெச்.ஐவி நோய் தொற்று ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்ல.

அர்த்தமற்ற குற்றச்சாட்டு

மாங்காட்டில் அவர் பிரசவ சிகிச்சைக் காக அனுமதிக் கப்பட்ட போதே எச்ஐவி பரிசோதனை யை மேற்கொள்ள அவருக்கு செவிலியர் அறிவுறுத்திய நிலையில், 
ஹெச்.ஐ.வி



தான் தனியார் மருத்துவ மனையில் ஏற்கனவே எச்ஐவி பரிசோதனை செய்து விட்டதாக கூறி எச்ஐவி பரிசோதனை மேற் கொள்ள மறுத்துள்ளார்.
பரிசோதனை செய்ய வேண்டிய இடங்களில் பரிசோதனையை மேற்கொள் ளாமல் புறக்கணித்து விட்டு பின்னர் நோய்த் தொற்று இருப்பதை கண்டறிந்து கூறிய மருத்துவ மனை மீது குற்றம் சாட்டுவது அர்த்த மற்றது என வாதிட்டார்..

உயர் நீதிமன்றம் தள்ளுபடி

அதே நேரத்தில், அப்பெண்ணுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப் பட்ட உடன், சம்பந்தப் பட்ட தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உரிய சிகிச்சைகள் அளித்ததோடு,

குழந்தைக்கு எச்ஐவி நோய் தொற்று ஏற்படாமல் காப்பாற்றி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில்
ஸ்வீட் கார்ன் அல்வா செய்வது எப்படி?
அவருக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில், பணி வழங்கி உள்ளதாகவும் அவர் கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு பணியாற்றி வருவதாக வும் எடுத்துரைத்தார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பாதிக்கப் பட்டதாக கூறும் பெண்ணின் குற்றச் சாட்டுகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings