கடிதம் எழுதி விட்டு கலெக்டர் சசிகாந்த் செந்தில் திடீர் ராஜினாமா !

0
நாடு இப்போது போகக்கூடிய மோசமான நிலைமை யில், நான் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகிப்பது, தார்மீக ரீதியாக சரியானதாக இருக்காது என்று கடிதம் எழுதி விட்டு, 
கலெக்டர் சசிகாந்த் செந்தில்




மாவட்ட கலெக்டரும், முன்னணி ஐஏஎஸ் அதிகாரியு மான சசிகாந்த் செந்தில் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசின் சில அதிரடி நடவடிக்கைகள் பிடிக்காமல்தான், இவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படு கிறது.

ஏற்கனவே சசிகாந்த் செந்தில் போலவே மற்றொரு தமிழ் ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன், கோபிநாதன் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது முக்கியமான தகவல் ஆகும்.
கர்நாடக மாநிலம் மங்களூரை, தலைமை யிடமாகக் கொண்டது தென் கனரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி வந்தவர்தான் சசிகாந்த் செந்தில்.

சென்னை அதிகாரி

2009 ஆம் ஆண்டு, பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான இவரின், பூர்வீகம் சென்னை நகரம்தான். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் கல்வி பயின்ற இவர், 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில், மாநில அளவில், முதல் நபராக தேர்ச்சி பெற்றவர்.

இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி கலெக்டராக பணி யாற்றினார். இதன் பிறகு ஷிமோகா மாவட்ட பஞ்சாயத்து, தலைமை செயல் அதிகாரியாக இருமுறை நியமிக்கப் பட்டார்.

பிறகு சித்ரதுர்கா மற்றும் ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி யுள்ளார். 2016ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் துறையின் இயக்குனரா கவும் செந்தில் பணியாற்றியவர்.

நல்ல பெயர்

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தென் கனரா மாவட்டத்தில், கலெக்டராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப் பட்டார். பதவியேற்ற நாள் முதலே, பொதுமக்கள் மத்தியிலும் பிற அதிகாரிகள் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றார், 
நல்ல பெயர்




சசிகாந்த் செந்தில். இவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் நியாயமாகவும் பணியாற்றக் கூடியவர் என்று பலதரப்பட்ட மக்களாலும் அழைக்கப் பட்டு வருகிறார். 

இந்த நிலையில் திடீரென இன்று செந்தில் தனது பதவியை இன்று, ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஒரு கடிதத்தை அரசுக்கு அவர் அனுப்பி யுள்ளார். அது செய்தி மற்றும் விளம்பரத்துறை வழியாக ஊடகங்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது.

கடிதம்

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஐஏஎஸ் பணியி லிருந்து நான் ராஜினாமா செய்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டியது கடமை.
உங்கள் குழந்தைக்கு டால்கம் பவுடர் பயன்படுத்துகி றீர்களா? - கவனம் !
இது முற்றிலுமாக எனது சொந்த முடிவு மட்டும் தான். தற்போது நான் வகிக்கும் கலெக்டர் பதவிக்கோ, அல்லது வேறு அலுவல் சார்ந்த விஷயத்திற்கோ, இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

மாவட்டத்தின் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்னிடம் மிகுந்த அன்போடு பழகி வந்தனர். நடுவழியில் நான் எனது பதவியை ராஜினாமா செய்ததற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

பன்முகத் தன்மைக்கு ஆபத்து

நமது ஜனநாயகம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. ஆனால் அந்த கட்டு மானத்தின், அடிப்படை முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு சமரசங்கள் செய்யப்படும் இந்த கால சூழ்நிலை யில், நான் பொதுப் பணியில் இருப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. 
பன்முகத் தன்மைக்கு ஆபத்து




வருங் காலங்களில் நமது நாட்டின் அடிப்படை தன்மைக்கு இன்னும் சிரமமான காலகட்டங்கள் வரக்கூடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே ஐஏஎஸ் பதவியி லிருந்து நான் விலகி இருப்பது நல்லது என்று கருதுகிறேன்.

இனிமேலும் இந்த பணி வழக்கமான பணியாக இருக்காது, என்பதை உணர்கிறேன். என்னிடம் நட்பு பாராட்டி நல்ல வகையில் பழகிய அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் அடிப்படை உரிமை

சமீபத்தில், பதவியை ராஜினாமா செய்யக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளில், சசிகாந்த் செந்தில் முதல் நபர் கிடையாது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான்,

யூனியன் பிரதேசமான டையூ டாமன் செயலாளராக பதவி வகித்த தமிழ் அதிகாரியான கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜம்மு -காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப் படுவதை பார்த்துக் கொண்டு சும்மா யிருக்க முடியாது என்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)