நகைக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற 4 வாலிபர்கள் கைது !

0
பெங்களூரு வில் நகைக்கடை உரிமையாளரை சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில் வடமாநிலங் களை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
நகைக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற 4 வாலிபர்கள் கைது



பெங்களூரு வயாலிகாவல் அருகே பி.ஜி.ஹள்ளி, வினாயகா சர்க்கிளில் நகைக்கடை நடத்தி வருபவர் ஆசிஷ். இவரது மனைவி ராக்கி. நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் தம்பதியினர் கடையில் இருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது கடைக்கு வந்த 2 மர்மநபர்கள், தங்க சங்கிலி வேண்டும் என்று ஆசிஷிடம் கேட்டனர். உடனே அவரும், தங்க சங்கிலியை எடுத்து 2 பேரிடமும் காட்ட முயன்றார். 

அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி நகைகளை கொடுக்கும்படி ஆசிசை மிரட்டினார்கள். இதனால் அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார்.
உடனே மர்மநபர்கள் ஆசிசை நோக்கி துப்பாக்கி யால் சுட்டனர். ஆனால் அவர் மீது குண்டு படாமல், சுவரில் துளைத்தது. இதன் காரணமாக ஆசிஷ் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். 

பின்னர் சுதாரித்து கொண்ட ஆசிஷ், அவரது மனைவி ராக்கி கடையில் இருந்த நாற்காலிகள், பிற பொருட்களை தூக்கி மர்மநபர்கள் மீது வீசினார்கள். இதனால் மர்மநபர்கள் துப்பாக்கி, செல்போன், தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். 

இது குறித்து வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் களை தேடி வந்தனர். மேலும் கொள்ளையர் களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டது. 

அத்துடன் கொள்ளை யர்களை அடையாளம் காண ஆசிஷ் கடை மற்றும் அதை சுற்றி யுள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். 



இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவே கொள்ளையர்கள் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று காலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு வினாயகா சர்க்கிளில் உள்ள ஆசிஷ் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் கொள்ளை யடிக்க முயன்றதுடன், ஆசிசை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் யோகேந்திர குமார், நவீன், சஞ்சீவ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. 

தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே 4 பேரை கைது செய்துள்ளனர். கே.ஆர்.புரம் அருகே பதுங்கி இருந்த போது போலீசாரிடம் 4 பேரும் சிக்கி இருந்தனர்.

அந்த கொள்ளை யர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பாலாஜி ரமேஷ் கயாக்வாட் (வயது 25), அரியானா மாநிலத்தை சேர்ந்த பால்வான் சிங் (24), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீராம் பிஸ்னோ(26), ஓம்பிரகாஷ் (27) என்று தெரிந்தது. 

இவர்கள் 4 பேரும் கே.ஆர்.புரம் அருகே வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக வசித்து வந்துள்ளனர். பாலாஜி மட்டும் வெள்ளி பொருட்கள் தயார் செய்யும் வேலை செய்துள்ளார். மற்ற 3 பேரும் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளனர்.
ஆசிஷ் நகைக் கடையில் கொள்ளை யடிக்க கடந்த 2 மாதங்களாக 4 பேரும் திட்ட மிட்டுள்ளனர். இதற்காக நகைக் கடையில் ஆசிஷ் மட்டும் எப்போது தனியாக இருக்கிறார்?, 

நகைக் கடையில் வாடிக்கை யாளர்கள் இல்லாத நேரம் எப்போது? என்பதை கடந்த 2 மாதங்களாக நோட்டமிட்டுள்ளனர். மதிய நேரத்தில் ஆசிஷ் மட்டும் தனியாக இருப்பதை அறிந்து நேற்று (நேற்று முன்தினம்) 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேரும் நகைக்கடை வந்துள்ளனர். 

அவர்களில் பாலாஜியும், ஸ்ரீராமும் நகைக்கடைக்குள் சென்றுள்ளனர். ஸ்ரீராம் தான் சச்சின் தெண்டுல்கர் அணியும் தங்க சங்கிலி வேண்டும் என்று ஆசிஷிடம் கேட்டுள்ளார்.

அதன்பிறகு, பாலாஜி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஆசிசை நோக்கி சுட்டது தெரியவந்துள்ளது. ஆசிஷ் கடையில் இருக்கும் தங்க நகைகளை கொள்ளை யடித்து விரைவில் பணக்காரராக ஆக வேண்டும் என்று 4 பேரும் திட்ட மிட்டுள்ளனர். 



முதல் முறையாக குற்ற சம்பவங்களில் ஈடுபட 4 பேரும் முயன்றது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்பு குற்றங்களில் ஈடுபட்டுள் ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான 4 பேரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அந்த துப்பாக்கிகள் யாரிடம் வாங்கினார்கள்? என்பது தொடர்பா கவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

நகைக்கடை முன்பாக விட்டு சென்றிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்ததன் மூலம் கிடைத்த தகவல்கள் மூலமாக தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு 4 பேரையும் கைது செய்தனர்.
கொள்ளை யர்களை திறமையாக செயல்பட்டு பிடித்த தனிப்படை போலீசாருக்கு எனது பாராட்டுக் களை தெரிவித்து கொள்கிறேன். 

அவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும். கைதான 4 பேர் மீதும் வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறினார்.

பேட்டியின் போது குற்றப்பிரிவு இணை கமிஷனர் சந்தீப் பட்டீல், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு உடன் இருந்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)