சுதந்திர தினத்தை முன்னிட்டு மெரினாவில் போக்குவரத்து மாற்றம் !

0
நாளை 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற வுள்ளது. இதனால், பாதுகாப்பு காரணங்கள் கருதி, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
மெரினாவில் போக்குவரத்து மாற்றம்
காவல்துறை தரப்பில் இது குறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், “உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலும், 

போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது.

காமராஜர் சாலை யிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரி முனையை வந்து அடையலாம்.

பாரிமுனையிலிருந்து, ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடைய லாம்.
அண்ணா சாலையி லிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் என்எஸ்சி போஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடைய லாம். 

முத்துசாமி சாலையி லிருந்து கொடி மரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடை யலாம்.

சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண Vehicle Pass வைத்திருப்போர் காலை 8.45 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமை செயலகம் உள் வாயிலின் அருகே இறங்கி கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும்.

ஆனால், இதே அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணிக்கு பின் கொடி மரச்சாலை ஜார்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.
நீல மற்றும் பிங்க் வண்ண வாகன அட்டை வைத்திருப்போர் கொடி மரச்சாலை ஜார்ஜ் கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக சென்று 

தலைமைச் செயலக வெளிவாயில் அருகே இறங்கி கொண்டு வாகனங்களை தலைமை செயலகத்திற்கு எதிர்புறமுள்ள பொதுப் பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக் கொண்டு வாகனங் களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிவரும் மாநகர பேருந்துகள் மாணவர்களை, போர் நினைவுச் சின்னம் அருகே இறக்கி விட்டபின், போர் நினைவுச் சின்னம் அருகில் உள்ள தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)