நமக்கு மட்டும் இப்படியா? - இணையத்தைக் குழப்பிய போட்டோ ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

நமக்கு மட்டும் இப்படியா? - இணையத்தைக் குழப்பிய போட்டோ !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
கீழே நீங்கள் பார்த்த படம் கறுப்பு-வெள்ளை போட்டோவா அல்லது கலர் போட்டோவா? சந்தேகம் வந்தால் மீண்டும் ஒரு முறை பார்த்து விடுங்கள். 
ஆப்டிகல் இல்யூஷன்முதலில் அது கலர் போட்டோவாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது மீண்டும் அதை உற்றுக் கவனித்தால் அது ஒரு கறுப்பு வெள்ளை போட்டோ என்பது தெரிய வரும்.
ஒரிஜினல் போட்டோ
உங்களுக்கு மட்டுமல்ல இதைப் பார்க்கும் அனைவரு க்குமே அந்தக் குழப்பம் இருக்கிறது. சமூக வலை தளங்களில் கடந்த சில நாள்களாக இது போன்ற சில போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !
அது மட்டுமன்றி பார்ப்பவர்களின் கண்களையும் ஏமாற்றி விடுகின்றன. @page_eco என்ற ட்விட்டர் கணக்கில் இதே போல ஒரு போட்டோ கடந்த சில நாள்களுக்கு முன்னால் ட்வீட் செய்யப் பட்டிருந்தது.
ஆப்டிகல் இல்யூஷன்
அதன் பின்னரே அது வைரலானது. இந்த போட்டோக்களை டிஜிட்டல் மீடியா ஆர்ட்டிஸ்ட் மற்றும் மென்பொருள் பொறியாளரான Øyvind Kolås என்பவர் உருவாக்கி யிருக்கிறார்.காட்சிப் பரிசோதனைக் காக Patreon என்ற நிறுவனத்துக் காக இந்த போட்டோக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. 'colour assimilation grid illusion' என்ற உத்தி இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன்
தேர்ந்தெடுக் கப்பட்ட நிறங்களைக் கொண்ட கோடுகளைக் கறுப்பு வெள்ளை போட்டோக்களின் மேல் அவர் பொருத்தி யிருக்கிறார்.
"கறுப்பு வெள்ளை படத்தின் மேல் அதிகச் செறிவுள்ள நிறக் கோடுகளால் கண்களில் இருக்கும் grayscale செல்கள் அந்தப் பகுதிகளில் நிறங்கள் இருப்பதாக உணர்ந்து கொள்கின்றன" என Øyvind Kolås குறிப்பிட்டி ருக்கிறார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause