இலங்கையில் 4 வருடத்துக்கு முன் இவர் ஒரு ஸீரோ ஆனால் இப்போ தெரியுமா?

0
4 வருடத்துக்கு முன் இலங்கையில் பியுமினி ஒரு ஸீரோ. ஆனால் இப்போது இவரொரு ஹீரோயின் வளர்ந்து வரும் தொழில் அதிபர்.
4 வருடத்துக்கு முன் இவர் ஒரு ஸீரோ
மாத்தளையில் இருந்து உக்குவளை க்கு சென்று, அங்கிருந்து காட்டுக்குள் 4 கிலோ மீட்டர் தூரம் மேடு பள்ளம் ஏறி இறங்கினால், பியுமினி யையும், 

அவரது குடும்ப உறுப்பினர் களையும், தொழில் சாலையையும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களை யும் நீங்கள் சந்திக்கலாம்.

உயர்தர கல்வி படிக்கும் போதே, எல்லோரு க்கும் வரும் காதல் நோய் பியுமினி க்கும் வந்தது. 

அது ஜுரமாக மாறி படிப்பை பாதியில் விட்டு கணவருடன் ஓட முடியாமல் நிற்கும் போது தான் வாழ்வதற்கு அன்பு மட்டுமல்ல பணமும் தேவை என்பதை பியுமினி உணர்ந்து கொண்டார்.
ஆனால் பியுமினி புத்திசாலி, தொடர்ந்து சாப்பிட ஏதாவது வழி உண்டா என யோசித்த வேளை கணவருக்கு சமைக்கத் தெரியும் என்பது நினைவுக்கு வந்துள்ளது. 

பிறகென்ன, மாத்தளை டவுனில் ஒரு குட்டி ஆப்ப கடை திறக்க வியாபாரம் சூடு பிடித்துள்ளது. 

இவர்களது முன்னேற்ற த்தை பொறுக்க முடியாத கடை உரிமையாளர், இரவோடிர வாக அவர்களை விரட்டி, மீண்டும் நடு வீதிக்கு தள்ளி யுள்ளார்.

இந்நிலையில் கையில் இருந்த 15000 ரூபாவில், மீண்டும் வீதி ஓரத்தில் ஒரு தேங்காய் ரொட்டி கடை திறந்த போதும் 

அவர்களுக்கு எதிர் பார்த்த இலாபம் கிடைக்க வில்லை. இருவருக்கும் மூன்று நேரம் சாப்பிட முடியவில்லை.
பியுமினி நன்றாக பாடுவார் என்பதால் பகலில் பெட்டிக் கடையில் வியாபாரம் செய்து, இரவில் பாட்டு கச்சேரிகளில் பாடி பணம் புரட்டத் தொடங்கினார்.
முறுக்கு  வியாபாரம்
பியுமினி ஒரு குட்டி யானை அவருக்கு இந்த உழைப்பெல்லாம் சோளப்பொரி. எனவே உழைக்க வேண்டும், என்ற வெறி 

அவருள் உந்த, வெறியுடன், தனது குட்டி பெட்டி கடைக்கு வருவோர் போவோரிட மெல்லாம் தனது குமுறலை கொட்டி கொண்டிருந்தார்.

இப்படி எல்லோரிடமும் அழுது புலம்பி விடுவாள். யெஸ் அவளது புலம்பல் யாரோ ஒரு ஸ்ரீலங்கனின், இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்ரீலங்கனின் காதில் விழுந்துள்ளது. 
ஆம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் அடுத்த வீட்டில் என்ற தத்துவம் பியுமினிக்கு புரிய வைக்கப் பட்டது.

அடுத்த நாளே ஒரு ஓலை குடிசைக்குள் உட்கார்ந்து கிட்டதட்ட ஆயிரம் முறுக்கு செய்து, பாலித்தீனில் அடைத்து கொழும்பில் உள்ள பிரபல முறுக்கு மொத்த வியாபாரியின் கடைக்கு பியுமினி கணவருடன் சென்றாள். 

அங்கிருந்த முறுக்கு முதலாளி உடனடியாக இவர்களது பொருளை நிராகரித்த போதும், மனம் தளராமல் மீண்டும் அடுத்த நாளும் அங்கு சென்றார், அழுத்தம் திருத்தமாக நிராகரித்தார் முதலாளி.

ஆனால் ஐம்பது முறுக்கு பாட்டிலுக்காவது ஒப்புதல் எடுக்காமல் மாத்தளைக்கே வரக்கூடாது என பியுமினிக்கு அந்த ஆலோசகரால் கட்டளை இடப்பட்டிருந்தது. 
பாம் ஆயில்
பியுமினியின் கணவர் மாத்தள தம்புள்ள பிரதான வீதியில் ஒலை கொட்டகையில் தேங்காய் ரொட்டி விற்று கொண்டிருந்தார், பியுமினி பெட்டா பஸ் நிலையத்தில் ஒன்றரை மாதம் அலைந்தார்.

அடிமேல் அடி அடித்தால் முறுக்கு விற்கின்ற முண்டாசு காரனுகளும் குப்புற விழுவார்கள் என்பதற்கு பியுமினி ஒரு எடுத்துக்காட்டு. 
அப்போது ஆறு பாட்டில் பாம் ஆயில் கடனுக்கு கேட்ட போது, போடி போ என்று சொன்ன குருநாகல எண்ணெய் கிடங்குகாரர், 

கம்பளை அரிசி ஆலை உரிமையாளர், கொழும்பு முறுக்கு முதலாளி அனைவரும் இப்போது பியுமினி யின் வரவுக்காக காத்து கொண்டிருக்கின் றார்கள்.

இதனை எழுதி கொண்டிருக்கும் போது (26-8-2019) பியுமினி லாரியில் ட்றைவிங் செய்து கொண்டு யாழ் மருதனா மடத்தை நோக்கி 7000 ஏழாயிரம் முறுக்கு பாட்டில்களுடன் போய்க் கொண்டிருக் கின்றார் பியுமினி .
இரண்டு லொறி, இருபது நேரடி ஊழியர்கள், தாய் தந்தை மாமா, மாமி, தங்கைகள், மதினிகள், மச்சான்மார், அடுத்த வீடு, ஏன் அந்த கிராமத்தில் உள்ள ஏழை குழந்தைக் கெல்லாம் பியுமினி ஒரு கோட் மதர்.
சவால்களை சந்திக்க தயாராக இருப்பவர்களிற்கு எப்பொழுது வெறிப்படிகள் காத்து கொண்டே இருக்கும் என்பதற்கு பியுமினி ஒரு எடுத்துக்காட்டு...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)