80 அடி உயரத்தில் தலைகீழாகத் தொங்கிய பெண் - யோகாவினால் விபரீதம் !

0
மெக்சிகோவில் யோகா செய்வதற்காக 80 அடி உயரக் கட்டிட விளிம்பில் தலை கீழாகத் தொங்கிய இளம்பெண், உயிருக்குப் போராடிக் கொண்டிருக் கிறார்.
மெக்சிகோவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் 23 வயது இளம் பெண் அலெக்ஸா தெரசா, 6-வது தளத்தில் உள்ள தமது அறையின் பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
கடினமான யோகாவை செய்யப் போவதாகக் கூறி, கைப்பிடி விளிம்பில் தலைகீழாகத் தொங்கிய அவர், பிடி நழுவி கீழே விழுந்தார். அவர் விழுவதற்கு சற்று முன் அவரது தோழி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தலைகீழாக விழுந்த தெரசாவின் உடலில் 110 எலும்புகள் உடைந்துள்ளன. இரு கால்கள், முதுகு, இடுப்பு, தலை என பல இடங்களில் காயங்களோடு சிகிச்சை பெறும் அவருக்கு பெற்றோர் கோரிக்கையின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்க முன் வந்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)