அமேசானையே விழுங்கும் தீ - பதை பதைக்க வைக்கும் ஆதாரம் !

0
உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். கடந்த சில வாரங்களாக அது பற்றி எரிகின்றது. உலக வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு தற்போது அங்கு மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 
அமேசானையே விழுங்கும் தீ




இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. அதில் கருகி பல உயிர்கள் மடிந்து விட்டன. உயிர்களையும், இயற்கையையும் காக்க இரணுவம் மற்றும் மனிதநேயம் படைத்த உள்ளங்கள் ஒரு புறம் போராடிக் கொண்டிருக் கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் அங்கு மொத்தமாக 73000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 
இதில் 90% காட்டுத் தீ இன்னும் அணைய வில்லை. நாளுக்கு நாள் அமேசான் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த காட்டுத் தீ சம்பவத்திற்கு மக்களின் செயல்களே காரணம் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் காட்டு பகுதியில் தங்களின் பயன்பாட்டிற் காக வைக்கும் தீயே பிரதான காரணம் என்று தெரிய வந்துள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் காடுகளில் தீ பிடிப்பது இயல்பு என்றாலும் அமேசான் காட்டில் தீ பரவுவது சற்று கடினம் தான்.

எனினும் தற்போது மக்களின் செயல் பாடுகளால் காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் அதிகரித்துள்ள தாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தற்போது இருக்கும் பிரேசில் அதிபர் போல்சோனா ரோவின் வளர்ச்சி கொள்கைகளும், அமேசான் காட்டின் அழிவிற்கு ஒரு காரணமாக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஏனென்றால் அதிபர் தேர்தலின் போது போல்சோனாரோ அமேசான் காடுகளில் உள்ள வளங்களை வைத்து பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தார்.




அவரின் இந்தக் கொள்கையினால் தற்போது அமேசான் காட்டின் அழிப்பு அதிகரித்துள்ளது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட புகை பிரேசில், சாவ் பாவ்லோ, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது.
அந்த அளவிற்கு இந்த காட்டுத் தீ பெரிதாக்கிக் கொண்டே இருக்கின்றது. மிக முக்கியமாக சாட்டிலைட் மூலமாக பார்த்தாலே தெரியும் அளவிற்கு இந்த காட்டுத் தீ விஸ்வரூபம் எடுத்து காட்டையே விழுங்கி கொண்டிருக் கின்றது.
காட்டுத் தீ

காட்டுத் தீ விஸ்வரூபம்
பதைக்க வைக்கும் ஆதாரம்




















Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)