அபிநந்தன் சிக்கியதற்கு தகவல் தொடர்பு சாதனம் தான் காரணம் - பின்னணி ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

அபிநந்தன் சிக்கியதற்கு தகவல் தொடர்பு சாதனம் தான் காரணம் - பின்னணி !

Subscribe via Email

ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப் பட்டனர். 
அபிநந்தன்இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதை யடுத்து பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப் படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். 

அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழே விழுந்துள்ளது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுவித்தது.
இந்தச் சம்பவங்கள் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தி னரிடம் சிக்கிக் கொண்டதற் கான முக்கிய காரணம் வெளியாகி யுள்ளது. 

மிக்-21 விமானத்தில் உள்ள பழைய தகவல் தொடர்பு சாதனமே அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசி யிருக்கிறார் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர். 
அபிநந்தன் சிக்க காரணம் தகவல் 
 தொடர்பு சாதனம்அவர் பேசும்போது, `இந்திய விமானத்தில் குறைபாடுகள் இல்லை யென்றால் நாம் அபிந்தனை பாகிஸ்தானிடம் சிக்க வைத்திருக்க மாட்டோம். 

பாகிஸ்தானின் F16 ரக விமானத்தைத் தாக்கி வீழ்த்தும் போது அபிநந்தனின் விமானத்தி லிருந்த தகவல் தொடர்புச் சாதனம் பாகிஸ்தான் ராணுவத்தின ரால் துண்டிக்கப் பட்டுள்ளது.

விமானத்தை வீழ்த்திய பிறகு, மீண்டும் இந்தியா திரும்புவது போன்ற எந்தக் கட்டளைகளும் இந்தியத் தரப்பிலிருந்து அவருக்குத் தரப்பட வில்லை. அதனால் அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் போது, அவர்களிடம் சிக்கியுள்ளார். 
அபிநந்தன் இருந்த மிக்-21 விமானத்தில் ஆன்டி ஜாமிங் (anti-jamming) இருந்திருந்தால் இந்திய அதிகாரிகளின் கட்டளைப்படி விமானத்தை வீழ்த்திய பிறகு, இந்தியா திரும்பி யிருப்பார். 

பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்காமல் தப்பி யிருப்பார்” எனத் தெரிவித்துள்ளார். பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவு க்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்க இந்திய விமானப் படையின் சில விமானங்கள் சென்றன. 
ஆன்டி ஜாமிங் - anti-jammingஒரு கட்டத்தில் அனைத்து விமானங்களும் மீண்டும் இந்தியா திரும்பும்படி அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல் அபிநந்தனை அடையாததால் அவர் தொடர்ந்து பாகிஸ்தான் விமானத்தை விரட்டி யடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

விமானப்படைக்கு மேம்படுத்தப் பட்ட மற்றும் சிறந்த தகவல் தொடர்புச் சாதனங்கள் தேவை என 2005-ம் ஆண்டு முதன் முதலாகக் கோரிக்கை வைக்கப் பட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் தான் ஒவ்வொரு வீரருக்கும் மிக முக்கியமான ஒன்று. 
2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையில் புதிய தகவல் தொழில் நுட்பம் தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. `மேம்படுத்தப் பட்ட சாதனங்களின் குறைபாடுகளே இந்திய விமானப் படைக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது. 

நமது தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் பழைமை யானவை. எந்தக் கால தாமதமும் இல்லாமல் பழைய தொழில்நுட்ப சாதனங்களை மாற்றி யமைக்க வேண்டும்” என ஏர் வைஸ் -மார்ஷல் சுனில் ஜெய்வந்த் கூறியுள்ளார்.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close