கையொப்பமிட வந்த காவல் நிலையத்தில் டிக்டாக் !

0
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆதி, வினோ, மதன்குமார் ஆகிய மூவரும் சில நாள்களுக்கு முன்பு நல்லம் பள்ளியில் இரண்டு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுள்ளனர். 
காவல் நிலையத்தில் டிக்டாக்



நண்பர்க ளான இவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 15 நாள்கள் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் தினமும் கையொப்ப மிட வேண்டும் என்று நிபந்தனை யில் ஜாமீன் வழங்கி யுள்ளது. அதற்காக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கையொப்ப மிட்டு விட்டு வருகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கையொப்பம் போட்டு விட்டுத் திரும்பும் போது காவல் நிலையம் முன்பாக காலரைத் தூக்கி விட்டபடி கெத்தாக நடந்து வருவது போல டிக்டாக் வீடியோ செய்துள்ளனர். 



அந்த டிக்டாக் வீடியோவில்.... யாரா இருந்தாலும், எவனா இருந்தாலும் எங்களுக்கு என்ன பயமா... என்ற பாடல் வரிகள் வருவது காவல் நிலையத்தை இழிவு படுத்துவது போல இருப்பது சமூக ஊடக தளத்தில் உள்ளவர்கள் உணர்ந்ததால் இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத் திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
டிக்டாக் வீடியோ பார்த்த அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் குமார், ஆதி, வினோ, மதன்குமார் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)