மேகியை நெருப்பில்லாமல் காரில் சமைத்த இளைஞர் எப்படி தெரியுமா?





மேகியை நெருப்பில்லாமல் காரில் சமைத்த இளைஞர் எப்படி தெரியுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
இளைஞர் ஒருவர் மேகியை நெருப்பில்லாமல் சமைத்துள்ளார். இதுகுறித்த தற்போது வைரலாகி வரும் வீடியோ குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
நெருப்பில்லாமல் மேகி சமைத்த இளைஞர்?
இணையத்தில் பல விதமான வீடியோக்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அவை யனைத்துமே பிரபலமாகி விடுவதில்லை. 

அதே சமயம், ஒரே ஒரு வீடியோ மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந் தவர்களும் இந்த உலகில் இருக்கின்றனர். 

அந்த அளவிற்கு இணையம், உலகையே ஆளுகை செய்து கொண்டிருக் கின்றது. 

இதன் காரணமாகவே, பெரும் பாலானோர் தங்களது திறன்களை வீடியோக்கா ளாக எடுத்து யுடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 
அதே சமயம், சிலர் விநோதமான வீடியோக் களையும் எடுத்து அவ்வப்போது யுடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

லைஃப் ஹேக் என்ற பெயரில் பதிவிடப்படும் வீடியோக் களுக்கு, நெட்டிசன்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. 
யுடியூப், பேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில்
அந்த வகையில், ஹூண்டாய் சொனேட்டா காரின் உரிமையாளர் ஒருவர் பதிவிட்ட வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது. 

இது குறித்த வீடியோவை மிஸ்டர் இந்தியன் ஹேக்கர் என்ற யுடியூப் தளம் வெளி யிட்டுள்ளது. பொதுவாக, நீண்ட தூர பயணங்களின் போது மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது உணவு. 

இது, பல இடங்களில் கிடைத்தாலும், நமக்கு ஏற்றாவாறு கிடைப்பதில் மிகப் பெரிய சிக்கல் நிலவி வருகின்றது. 

அப்படியே உணவு கிடைத்தாலும், அது தரமானதாக இருப்பதில்லை. இவ்வாறு, பல பிரச்னை களைக் கூறிக் கொண்டே போகலாம்.
2 நிமிட மேகியை நெருப்பு இல்லாமல் சமைப்பது
இவற்றிற் கெல்லாம் தீர்வு காணும் வகையில், இளைஞர் ஒருவர் மிகவும் சுலபமான வழியை நமக்கு வெளிப்படுத்தி யுள்ளார். 

அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 2 நிமிட மேகியை எவ்வாறு நெருப்பு, அடுப்பு இல்லாமல் சமைப்பது என்பதுகுறித்த காட்சிகளைத் தான் அவர் வெளி யிட்டுள்ளார்.
எல்லாம் சரி, நெருப்பில்லாம எப்படி சமைப்பதுனு தான கேட்கிறீங்க.. அதற்கான பதில் இதோ... 

ஹூண்டாய் சொனேட்டோ காரின் உரிமையாளர் நெருப்பு மற்றும் அடுப்பிற்கு பதிலாக அவருடைய காரின் எஞ்ஜினையேப் பயன்படுத்தி யுள்ளார்.
ஹூண்டாய் சொனேட்டோ கார்
சிறிய பாத்திரத்தில் மேகியை எடுத்துக் கொண்ட அந்த இளைஞர், அதனை சில்வர் ஃபாயில் காகதித்தைக் கொண்டு இறுக மூடி விடுகின்றனர். 

பின்னர், அந்த பாத்திரத்தை எஞ்ஜினுக்கு அருகே வைத்து விட்டு, காரில் ஒரு ரவுண்டு சுத்தி வலம் வருகின்றார்.

அவ்வாறு, சிறிது தூரம் வலம் வந்த அந்த இளைஞர், சிறிது தூரத்திலேயே காரை நிறுத்தி விட்டு மேகியை எடுத்து பார்த்தார், 

அப்போது அது சரியாக வேகமால் இருந்தது. பின்னர், மீண்டும் புறப்பட்ட அந்த இளைஞர், சில கிலோ மீட்டர்கள் சென்ற பின்னர், காரை நிறுத்தி மேகியை எடுத்துப் பார்க்கிறார்.
எம்டி பிரியாணி செய்முறை !
அப்போது, அடிப்பகுதியில் இருந்த மேகி நன்கு வெந்தும், மேல் பகுதியில் இருந்த மேகி பாதி வேகமாலும் இருந்தது. இந்த முயற்சி பாதி வெற்றியை அளித்தாலும், பாதி தோல்வியை கொடுத்துள்ளது. 
மேகி வெந்தும் வேகமாலும்
இருப்பினும், இது தோல்வியின் அடையாள மாக இருக்கின்றது. இதற்கு, அந்த எஞ்ஜினின் வெப்பம் போதுமானதாக இல்லமையே முக்ககிய காரணமாக இருக்கின்றது. 

மேலும், கார் அலுங்கி குலுங்கி சென்றதால், பாத்திரத்தில் ஊற்றப் பட்ட நீர் கசிந்து, மேகி சமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.  

ஆகையால், இந்த லைஃப் ஹேக் தற்போது தோல்வியேச் சந்தித்துள்ளது. 

அதே சமயம், நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள், இது போன்று எஞ்ஜினை பயன்படுத்துவ தற்காக பதிலாக, 

வெது வெதுப்பான நீரை உருவாக்கும் கெட்டில் போன்ற கருவியை பயன்படுத்தி உணவை சமைக்கலாம். இல்லை யெனில் இவ்வாறு தான் சிக்கலைச் சந்திக்க நேரிடும்.
லைஃப் ஹேக் - Life Hawk
இதேபோன்று, முன்னதாக பலர், முட்டை ஆம்லெட்டை கடும் வெயிலில் போடுவதைப் போன்ற காட்சிகளை நாம் பார்த்திருப்போம். 
அத்தகைய நடவடிக்கையை பின் தொடர்ந்தே இந்த இளைஞர் இவ்வாறு புதிய முயற்சியை மேற்கொண் டுள்ளார். 

இது தோல்வியைச் சந்தித்தாலும், அவரின் புதிய முயற்சிக்கு நாம் பாராட்டைத் தெரிவித்தே ஆக வேண்டும்.
முட்டை ஆம்லெட்டை கடும் வெயிலில்
கார் எஞ்சினில் மேகி சமையல்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)