வேகமாக கொழுப்பை கரைக்க இண்டர்வெல் டிரெயினிங் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

வேகமாக கொழுப்பை கரைக்க இண்டர்வெல் டிரெயினிங் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
கால மாற்றத்துக் கேற்ப உடற் பயிற்சியில் பல்வேறு புதிய முறைகள் வந்து கொண்டிருக் கின்றன. அந்த வகையில் இண்டர்வெல் டிரெயினிங் என்பது சமீப காலமாக ஃபிட்னஸ் உலகில் அடிக்கடி பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
வேகமாக கொழுப்பை கரைக்கInterval training என்றவுடன் 2 நாளைக்கு ஒரு முறை இடைவெளி விட்டு செய்வதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போது, இடையிடையே ரெஸ்ட் எடுத்துக் கொண்டு செய்வதோ இல்லை. 

பல வருடங்களாக விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உடற் பயிற்சியில் பயன்படுத்தும் நடைமுறை இது. கார்டியோ பயிற்சிகளின் மூலம் இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம்.

உதாரணத்திற்கு ட்ரெட் மில்லில் குறைந்த 2.5 கிமீ வேகத்தில் நடக்க ஆரம்பித்து, பின் 7.5 கிமீ வரை வேகத்தைத் தீவிரமாக்கி அதே வேகத்தை குறிப்பிட்ட நிமிடம் நிலையாக தொடர்வது; அடுத்து 4.5 வேகமாக குறைத்து, மீண்டும் 2.5 வேகத்திற்கு கொண்டு வருவது. இதுதான் அடிப்படை.
இண்டர்வெல் டிரெயினிங் - Intervel Training
குறைவான வேகம், அதிக வேகம், மீண்டும் குறைவு என வேகத்தை மாற்றி மாற்றி செய்வது தான் இன்டர்வெல் ட்ரெயினிங். வித்தியாசமான இந்த பயிற்சி தற்போது பிரபலங் களையும், ஃபிட்னஸில் அதிக விருப்பம் கொண்டவர் களையும் மிகவும் ஈர்த்துள்ளது.

‘இண்டர்வெல் பயிற்சியானது உடலின் Aerobic மற்றும் Anaerobic என்ற இரு ஆற்றல் உற்பத்தி முறைகளை பயன்படுத்து கிறது. ஏரோபிக் அமைப்பில் நீங்கள் நீண்ட தூரம் நடக்கும் போதோ அல்லது ஓடும் போதோ சுவாசிக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி கார்போ ஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி உடல் முழுவதும் செல்ல அனுமதிக் கிறது.‘இதயத்தி லிருந்து, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, தசைகள் அதிகப் படியான ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவுகிறது. இதனால் நீங்கள் உடற் பயிற்சியை எளிதாக கையாள முடியும்.
கொழுப்பை கரைக்க இண்டர்வெல் டிரெயினிங்
சைக்கிளிங், ட்ரெட் மில் போன்ற முன்னரே வேகத்தை செட் செய்யக் கூடிய பொதுவாக கார்டியோ பயிற்சிகளில் மட்டும் இண்டர்வெல் ட்ரெயினிங்கை பயன்படுத்து கிறோம். இதய ஆரோக்கிய த்தை மேம்படுத்தவும், வேகமாக கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தாங்கு சக்தியை அதிகரிக்கவும் இது நல்ல பயிற்சி.

வாரத்தில் 3 நாட்கள் இன்டர்வெல் ட்ரெயினிங் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே உடற் பயிற்சியில் செய்த பயிற்சிகளையே திரும்பத் திரும்ப செய்யக் கூடாது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை எக்சர்ஸைஸ் பேட்டர்னை மாற்றி அமைக்க வேண்டும்.
கார்போ ஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றதொடர்ந்து ஒரே மாதிரி பயிற்சிகளை செய்வதால் உடல் அதற்கேற்ற வாறு தகவமைத்துக் கொண்டு விடும். அதையும் தினசரி வேலைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளும். ஒவ்வொருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மாற்றி, மாற்றி செய்ய வேண்டும்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close