மேகத்தின் ஊடாக செல்லும் உலகின் உயரமான பாலம் !

தரையிலிருந்து 1,854 அடி உயரத்தில் அமைக்கப் பட்ட உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறக்கப் பட்டுள்ளது. பொறியியல் துறையின் வல்லமையை பரைசாற்றும் விதமாக கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்,
மேகத்தின் ஊடாக செல்லும் உலகின் உயரமான பாலம் !
இந்த விண்ணை முட்டி நிற்கும் பாலத்தின் கூடுதல் சிறப்புகளையும், தகவல் களையும் தொடர்ந்து காணலாம். 

தென்மேற்கு சீனாவில் மலைப்பாங்கான நில அமைப்பில் உள்ள யுனான் மற்றும் குய்ஸோகூ ஆகிய இரண்டு மாகா ணங்களை இணைக்கும் விதத்தில் இந்த பாலம் அமைக்கப் பட்டுள்ளது.
இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே ஓடும் சி து ஆற்றில் குறுக்கே இந்த பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு மிகப்பெரிய கான்கிரிட் கோபுரங் களுக்கு இடையில் இந்த பாலம் தொங்கும் பாலமாக கட்டப் பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் பொதுபயன்பாட்டுக்கு திறக்கப் பட்டதையடுத்து, யுனான் மாகாணத்தில் உள்ள ஜுவான்வெய் மற்றும் குய்ஸோகூ மாகாணத்தில் உள்ள ஷூயிசெங் ஆகிய
மேகத்தின் ஊடாக செல்லும் உலகின் உயரமான பாலம் !
நகரங்களுக்கு இடையில் 4 மணிநேரமாக இருந்த பயண நேரம் இந்த புதிய பாலம் திறக்கப் பட்டதை யடுத்து ஒரு மணி நேரத்திற்கும் கீழாக குறையும். 

இந்த பாலத்தின் மூலமாக பயணிகள் மற்றும் சரக்குப் போக்கு வரத்துக்கு மிக ஏதுவாக அமையும்.
இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பிற பகுதி களிலிருந்து வரும் மக்களுக்கும் இது மிகச் சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரும் என்று சீன போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகிலேயே அதி உயரமான 8 பாலங்கள் சீனாவில் உள்ளன. தற்போது ஹூபே மாகாணத்தில் உள்ள ஸீடு ஆற்றின் குறுக்கே மற்றொரு பாலம் நிலத்திலிருந்து 4,400 அடி உயரத்தில் கட்டி வருகிறது.
மேகத்தின் ஊடாக செல்லும் உலகின் உயரமான பாலம் !
ரூ.1,000 கோடி மதிப்பில் இந்த பாலம் கட்டப் படுகிறது. இது திறக்கப்படும் போது உலகின் அதி உயரமான பாலம் என்ற பெருமையை பெறும்.
Tags: